14 வயது இளம் சீரியல் நடிகர் விபத்தில் பலி! 

 

14 வயது இளம் சீரியல் நடிகர் விபத்தில் பலி! 

ஹிந்தியில் ஒளிபரப்பான Sasural Simar Ka என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் சிவ்லேக் சிங்.

ஹிந்தியில் ஒளிபரப்பான Sasural Simar Ka என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் சிவ்லேக் சிங். அதைத்தொடர்ந்து ஹனுமான் தொடரில் நடித்ததன் மூலம்  பிரபலமானார். 14 வயதாகும் இவர் நேற்று குடும்பத்துடன் காரில் பயணம் செய்துள்ளார். 

அப்போது எதிர்பாரா விதமாக கார் விபத்து ஏற்பட சிவ்லேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பாலிவுட் இணையச் செய்தி பக்கங்களில் வெளியாகியுள்ளது. அந்த குறிப்பில், விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது அம்மா தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

boy

மேலும் இந்த சம்பத்தை நிகழ்த்திய லாரி டிரைவரை கைது செய்ய போலீஸார் முயன்று வருகின்றனர்.