14 லட்சம் பைக் கேட்டு அடம்…  தந்தை மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட மகன்!

 

14 லட்சம் பைக் கேட்டு அடம்…  தந்தை மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட மகன்!

ரூ.14 லட்சம் கொடுத்து பைக் வாங்கித் தராததால் தொழிலதிபரின் மகன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அஜி குமார். இவருடைய மகன் அகிலேஷ். தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அகிலேஷிடம் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆறு பைக்குகள், சொகுசு கார்கள் உள்ளன.

ரூ.14 லட்சம் கொடுத்து பைக் வாங்கித் தராததால் தொழிலதிபரின் மகன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அஜி குமார். இவருடைய மகன் அகிலேஷ். தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அகிலேஷிடம் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆறு பைக்குகள், சொகுசு கார்கள் உள்ளன. இந்த நிலையில், ரூ.14 லட்சத்துக்கு புதிதாக வந்துள்ள பைக்கை வாங்கித் தரும்படி தன்னுடைய தந்தையிடம் கேட்டுள்ளார். அவரே, ஏற்கனவே  பைக், கார் இருக்கே, 14 லட்ச ரூபாயில் எதுக்கு புது பைக் என்று கேட்டுள்ளார்.  

agilash

இதனால், அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை வந்துள்ளது. அஜி குமாருடன் பேசாமல் போராட்டம் நடத்தி வந்தார் அகிலேஷ். இந்த நிலையில், நவம்பர் 19ம் தேதி அகிலேஷ் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்து, கதை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனாலும், உள்ளே எந்த சத்தமும் இல்லை. இதனால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அகிலேஷ் தூக்கில் தொங்கி உயிரைவிட்டிருந்தார். 
பேசாமல் இருந்ததால் எப்படியாவது புது பைக் வாங்கி கொடுத்துவிடுவார் என்று அகிலேஷ் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அஜி குமார் பைக்கை வாங்கித் தர எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த அகிலேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிகிறது. 

agilash

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து 20ம் தேதி மாலை அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. 
ஏற்கனவே பல பைக் இருந்தும் புதிய 14 லட்ச ரூபாய் பைக்குக்காக இளைஞர் ஒருவர் உயிரை விட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.