14 நாட்கள் வேலிடிட்டி – ரிலையன்ஸ் ஜியோ ரூ.49 மற்றும் ரூ.69 விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம்

 

14 நாட்கள் வேலிடிட்டி – ரிலையன்ஸ் ஜியோ ரூ.49 மற்றும் ரூ.69 விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.49 மற்றும் ரூ.69 விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.49 மற்றும் ரூ.69 விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.49 மற்றும் ரூ.69 விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இதில் ரூ.49 பிளான் புதியது இல்லை. கடந்த டிசம்பர் மாதம் கட்டண உயர்வின்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த பிளானை நீக்கியது. தற்போது அந்த பிளான் மீண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ரூ.49 பிளானில் மொத்தம் 2 ஜிபி அதிவேக டேட்டா, 25 எஸ்.எம்.எஸ்., ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்கால், மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ்கால் பலன்கள் வழங்கப்படுகிறது.

ttn

அதேபோல ரூ.69 ஜியோ போன் சலுகையில் ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்கால், மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ்கால் வழங்கப்படுகிறது. மேலும் நாளொன்றுக்கு 500 எம்.பி அதிவேக டேட்டா, 25 எஸ்.எம்.எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி ஆகிய பலன்கள் வழங்கப்படுகிறது. இவ்விரு ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களுக்கும் 14 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.