மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் மைக்ரோ நிதி நிறுவனங்கள்! குமுறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

 

மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் மைக்ரோ நிதி நிறுவனங்கள்! குமுறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

மகளிர் சுய உதவிக் குழுக்களின், மூலம் வாங்கிய கடனை வசூலிக்க, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, தவறாக பேசும் மைக்ரோ பைனான்ஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி பாமகவினர் கோவையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் புலியகுளம், காந்திபுரம், போத்தனூர் மற்றும் வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் வசித்து வரும் பெண்கள், ஐடிஎப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ், அரைஸ், போன்ற பல்வேறு குறு, நிதி நிறுவனங்களில் முறையாக கடன் பெற்று அதனை மாத தவனை முறையில் செலுத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள, காரணத்தினால் மகளிர் குழு மூலமாக வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் மைக்ரோ நிதி நிறுவனங்கள்! குமுறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணம் வசூலிக்க வருகின்ற நிதி நிறுவன ஊழியர்கள் தங்களது வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து சுமார் ஐந்து மணி நேரங்களுக்கும் மேலாக பணம் வேண்டும் என்று தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல் பணம் கொடுத்தால் தால் செல்வோம் என அராஜகம் செய்கின்றனர். யாரை வேண்டும் என்றாலும் அழைத்து வாருங்கள் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வாங்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என தகாத வார்த்தைகளால் பெண்கள் என்றும் பாராமல் மிரட்டுவதாகவும், குற்றம்சாட்டிய பாதிக்கபட்டவர்கள் எனவும், பணம் வந்தவுடன் கட்டுவதாக கூறினால், பணம் கட்ட முடியாத உங்களுக்கு எதற்கு கடன் என தவறான நோக்கத்தில் பேசுவதாகவும், பணம் கட்ட முடியவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளுங்கள், இன்சூரன்ஸ் மூலமாக தாங்கள் கட்ட வேண்டிய தொகையை கழித்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கண்டித்து கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் குமார், புறநகர் மாவட்ட தலைவர் எம்.ஆர்.ரவி தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கொரானா ஊரடங்கு காலத்தில் வேலையின்மை காரணமாக பணம் கட்ட இயலாத நிலையில் தொந்தரவு கொடுத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் மைக்ரோ நிதி நிறுவனங்களை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

கடந்த 7ம் தேதியன்று அராஜகம் செய்யும் நிதி நிறுவனங்கள் தொடர்பாக பாதிக்கபட்டவர்கள் மற்றும் பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதேநிலை நீடித்தால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவுத்தனர்.