கொரோனாவிற்கு பிந்தய கால தொழிற்தாவாக்களை பேசி தீர்வு காணக்கோரி தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொரோனாவிற்கு பிந்தய கால தொழிற்தாவாக்களை பேசி தீர்வு காணக்கோரி தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அனைத்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனாவிற்கு பிந்தய கால தொழிற்தாவாக்களை பேசி தீர்வு காணக்கோரி தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிகட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நலவாரியத்தில் பதிவுசெய்ய புதுப்பிக்க ஆன்லைனில் பதிவு செய்ய கணவர், மனைவி தனித்தனியாக கைபேசி வைத்திருக்க வேண்டும். போன் நெம்பர் ஆதாரில் இணைக்கவேண்டும் என்ற கொடூர நிபந்தனையை கைவிடவேண்டும்.

பாதையோர வியாபாரிகளுக்கு அரசு அறிவித்தவாறு வங்கிக்கடன் வழங்க மறுக்கப்படுகிறது. கடன் கிடைக்க அரசு தலையிடவேண்டும். கைத்தறி நெசவுத்தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். புலம்பெயர் தொழிலாளர் சட்டப்படி தொழிலாளர்களை பதிவு செய்வதையும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொரோனாவிற்கு பிந்தய கால தொழிற்தாவாக்களை பேசி தீர்வு காணக்கோரி தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை விலக்கிக்கொள்ளவேண்டும். ஊதிய குறைப்பு
வேலை நீக்கம் உள்ளிட்ட கொரோனாவிற்கு பிந்தய கால தொழிற்தாவாக்களை உடனடியாக பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.