கோவையில் நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்கள்: அமைச்ச எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

 

கோவையில் நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்கள்: அமைச்ச எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவையில் நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500 கடந்து வருகிறது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வைரஸ் தொற்று நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.

கோவையில் நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்கள்: அமைச்ச எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

இந்நிலையில் கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் மக்களுக்கு பரிசோதனை செய்ய 20 நடமாடும் பரிசோதனை வாகனங்கள் 5 விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வைரஸ் தொற்று பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கோவையைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு சுமார் 7,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது துவக்கி வைக்கப் பட்டுள்ள நடமாடும் பரிசோதனை மாதிரி சேகரிப்பு வாகனங்கள் மூலம் வைரஸ் தொற்று பரவலாகக் உழைக்க முடியும்.

கோவையில் நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்கள்: அமைச்ச எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

இந்த வாகனத்தில் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியாற்றுபவர் மேலும் இந்த வாகனத்தில் போதிய அளவிற்கு மருத்துவ உபகரணங்கள் மருந்து பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். கோவையில் இதுவரை 10 ஆயிரத்து 810 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 11 லட்சத்து 63 ஆயிரத்து 212 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன .

கோவையில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் வைரஸ் தொற்று சிகிச்சை பெறும் நபர்களுக்காக உள்ளன. கொடிசியாவில் உள்ள சித்த மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதன் மூலம் 712 பேர் வைரஸ் தொற்று சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.