’வி சார்ட்’ செயலிக்கான தடை நீக்கம்-அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

 

’வி சார்ட்’ செயலிக்கான தடை நீக்கம்-அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

அமெரிக்காவில் ’வி சார்ட்’ செயலிக்கான தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. அமெரிக்கர்களின் தகவல்களை சீன நிறுவனங்கள் திருடுவதாகக் கூறி டிக் டாக், வி சார்ட் உள்ளிட்ட செயலிகளுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இந்த நிலையில் டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ’பைட் டான்ஸ்’ , அமெரிக்காவில் டிக் டாக் செயல்பாடுகளை விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

’வி சார்ட்’ செயலிக்கான தடை நீக்கம்-அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

இந்த நிலையில், ’வி சார்ட்’ செயலிக்கான தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில், தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு அதிபர் டிரம்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
’வி சார்ட்’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான டென்செண்ட் தொடர்ந்த வழக்கில், கலிபோர்னிய மாகாண வடக்கு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் ’வி சார்ட்’ செயல்பாடுகளை விற்பனை செய்வதற்கான பேச்சு வார்த்தைகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவை எதிர்த்து, அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.