பெங்களூருவில் டெஸ்லா மையம் – கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை

 

பெங்களூருவில் டெஸ்லா மையம்  – கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, பெங்களூருவில் மேம்பாட்டு மையம் அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூருவில் ஆராய்ச்சி மையம் மற்றும் மேம்பாட்டு மையத்தினை அமைக்க டெஸ்லா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்துள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த மாதம் நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை, இந்த மாதம் 10 ஆம் தேதி நடைபெற்றதாகவும், டெஸ்லா அதிகாரிகள் வருகை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் டெஸ்லா மையம்  – கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்த ஜூன் மாதம் பேசுகையில், டெஸ்லா நிறுவனத்தின் சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் விரைவில் இந்தியாவில் கிடைப்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், கர்நாடக அரசுடன் அந்த நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. டெஸ்லா நிறுவனம், அமெரிக்காவுக்கு வெளியே முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், மின்னணு வாகனங்களுக்கான கொள்கைகளை முதன்முதலில் வெளியிட்ட மாநிலமாக கர்நாடகா உள்ளது. இதையடுத்து டயம்லர், பாஷ், மஹிந்திரா நிறுவனங்கள் கர்நாடகாவில் மின்னணு வாகனங்களை தயாரிக்கும் ஆலைகளை அமைத்துள்ளன. ஓலா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கான முயற்சிகளில் உள்ளது.