குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் மின்சார ஸ்மார்ட் பிளக் -அமேசான் அறிமுகம்

 

குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் மின்சார ஸ்மார்ட் பிளக் -அமேசான் அறிமுகம்

குரல் வழி உத்தரவு மூலம் சாதனங்களின் மின்சார இணைப்பை இயக்க வசதியாக மின்சாரத்தில் இயங்கும் ஸ்மார்ட் பிளக் ஒன்றை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அலெக்ஸா வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் பிளக், பார்ப்பதற்கு சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும் என்றும் அதே சமயம், இதை அலெக்ஸா செயலி அல்லது அமேசானின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மூலமாக கட்டுப்படுத்தலாம் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட் பிளக் 2.4 ஜிகா ஹெர்ட்ஸ் வைபை யில் இயங்கும் என்றும், 3 பின் வடிவத்தில் உள்ள இது ஆண்டிராய்ட், ஆப்பிள், பயர் ஒஎஸ் என அனைத்து இயங்குதளம் கொண்ட சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் மின்சார ஸ்மார்ட் பிளக் -அமேசான் அறிமுகம்

அலெக்ஸா செயலி மூலமாக தங்களின் குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்பட்டு இந்த ஸ்மார்ட் பிளக் ஆன் அல்லது ஆஃப் ஆகும் என தெரிகிறது. இதன் மூலம் டிவி உள்ளிட்ட முக்கிய சாதனங்களை ஆன் செய்வதற்கு அதை தொட அவசியமில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆன் செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு ஆஃப் செய்யுமாறு உத்தரவிட்டால் தினமும் அந்த நேரத்திற்கு ஆன் மற்றும் ஆஃப் செய்யும் வசதியும் இதில் உண்டு என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட் பிளக்கின் விலை ஆயிரத்து 999 ரூபாய் என்றும், எக்கோ டாட் ஸ்பீக்கருடன் சேர்த்து வாங்கினால் 999 ரூபாய் மட்டுமே ஆகும் என அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் செயலி மற்றும் வலைதளத்திலும், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் குரோமா கடைகளிலும் இந்த ஸ்மார்ட் பிளக் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.

-எஸ். முத்துக்குமார்