”கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடத்துகிறது” – பேடிஎம் குற்றச்சாட்டு

 

”கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடத்துகிறது” – பேடிஎம் குற்றச்சாட்டு

கூகுள் நிறுவனம் தங்களை பாரபட்சமாக நடத்துவதாக பேடிஎம் செயலி குற்றம் சாட்டியுள்ளது.

பேடிஎம் செயலி ஆன்லைன் சூதாட்டங்களை ஊக்குவிப்பதாகக் கூறி , கடந்த சனிக்கிழமை அன்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டது.

இதனால் பேடிஎம் செயலியின் ’அப்டேட்’ கிடைக்காமல் பேடிஎம் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பயனர்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் பேடிஎம் கூறி இருந்தது.

”கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடத்துகிறது” – பேடிஎம் குற்றச்சாட்டு

இந்த நிலையில், தங்களை பாரபட்சமாக நடத்துவதாக கூகுள் நிறுவனத்தின் மீது பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா குற்றம் சாட்டியுள்ளார். தங்களுக்கு மட்டும் கூகுள் கொள்கைகள் மாற்றப்படுகின்றன என்றும், இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக போட்டி ஆணையத்தை அணுக உள்ளதாக குறிப்பிட்டார்.

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் மீது கூகுள் பாரபட்சம் காட்டுகிறது என எங்கள் வாதங்களை வர்த்தக போட்டி ஆணையத்தில் முன்வைப்போம் எனவும் விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.