கொரோனாவினால் சாகப்போறேன்; தேடவேண்டாம்: மனைவியிடம் கதைவிட்டு, வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த இளைஞர்

 

கொரோனாவினால் சாகப்போறேன்; தேடவேண்டாம்: மனைவியிடம் கதைவிட்டு, வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த இளைஞர்

தனிமனித இடைவெளி, சமூக இடைவெளி என்றுதான் கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருக்கிறது கொரோனா. ஆனால், வாழ்க்கை இடைவெளி என்று ஒரு இளைஞர் கதைவிட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

மகாரஷ்டிரா மாநிலம் நவிமும்பை பகுதியைச்சேர்ந்த இளைஞர் காதல் மன்னன் என்பதால், அவருக்கும் அவரது இளம்மனைவிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. எந்தப்பெண்ணுடன் பழகினாலும் அதை தெரிந்துகொண்டு, சண்டை போட்டு பிரித்துவிட்டு வந்துள்ளார் மனைவி.

கொரோனாவினால் சாகப்போறேன்; தேடவேண்டாம்: மனைவியிடம் கதைவிட்டு, வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த இளைஞர்

இந்த நிலையில், தான் விரும்பிய ஒரு பெண்ணுடன் நிரந்தரமாக வாழ முடிவெடுத்திருக்கிறார் அந்த இளைஞர். மனைவிக்கு தெரிந்தால் அது சாத்தியமேல் இல்லை. அதற்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொடிருந்தபோதுதான், அவருக்கு வசதியாக வந்தது கொரோனா.

வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த இளைஞர் திரும்ப வராமல், மனைவிக்கு போன் செய்து, ‘’எனக்கு கொரோனா..அதுவும் தீவிரமாக இருக்குது. நான் பிழைக்கமாட்டேன். உடலையும் ஒப்படைக்க மாட்டார்கள். மருத்துவமனை நிர்வாகமே புதைத்துவிடும். கலங்காதே. என்னை தேடாதே’’என்று சொல்லிவிட்டு லைனை துண்டித்துள்ளார்.

காதல் மன்னனாக இருந்தாலும், தாலிகட்டிய கணவன் ஆயிற்றே. தனது சகோதரர், உறவினர்களிடம் சொல்லி அழுது, கணவன் எந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார் என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.

நாட்கணக்கில் தேடியும் அவர் எந்த மருத்துவமனையிலும் இல்லை. இதனால் அதிர்ந்துபோன அப்பெண், கடந்த ஜூலை 24ம் தேதி அன்று போலீசில் புகார் கொடுக்க, அவர்களும் உண்மையிலேயே கொரோனா பாதித்திருக்கும் என்று நம்பி மீண்டும் மருத்துவமனைகளில் விசாரித்தனர். எத்தனை தேடியும் எந்த பிரயோசனமும் இல்லாததால் போலீசாரும் விழிபிதுங்கி இருக்கிறார்கள்.

கொரோனாவினால் சாகப்போறேன்; தேடவேண்டாம்: மனைவியிடம் கதைவிட்டு, வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த இளைஞர்

இந்நிலையில், வாசி பகுதில் ஒரு பைக் சில நாட்களாக கிடக்கிறது என்ற தகவல் கிடைக்க, அதை கைப்பற்றி போலீசார் விசாரித்து வந்தபோது, அந்து காணாமல் போன அந்த இளைஞரின் பைக் தான் என்று தெரியவந்தது. அதையடுத்து அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோதும் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது.

கடத்தப்பட்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில், அந்த இளைஞர் பயன்படுத்திய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிந்தாலும், அதை சோதித்தபோது, மத்தியபிரதே மாநிலம் இந்தூர் பகுதியை காட்டியது. அங்கு சென்று பார்த்தபோது, வேறொரு பெண்ணுடன் புதுவாழ்கைக்கையை உல்லாசமாக வாழ்ந்துவருவதை கண்டதும் போலீசார் அதிர்ந்தனர்.

மனைவி மற்றும் உறவினர்களின் முன்பு அசடு வழிந்து நின்றார் அந்த இளைஞர்.