Home உணவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம்

பல நோய்களை குணமாக்கும் மாற்று மருந்தாக ரசம் இருப்பதால்தான், நோய் காய்ச்சல் நேரங்களில் ரசம் சோறு சாப்பிடுவது நமது பழக்கங்களில் ஒன்றாக உள்ளது.

வைட்டமின் குறைபாடு,மற்றும் தாது உப்புக் குறைபாடுகளை ரசம் சரி செய்கிறது என்கிறது சித்த மருத்துவம். தமிழர்கள் கண்டு பிடித்த இந்த ரசத்தைதான் வெளி நாட்டினர் “சூப்” வகைகளாக தயார் செய்து குடிக்கின்றனர்.

ரசத்தில் மட்டும்தான் விதவிதமாக தயாரிக்க முடியும். புளிரசம், பருப்பு ரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான தயாரிக்கலாம். சைவ, அசைவ உணவுகள் என எதை சாப்பிடாலும் அதற்கு பின் ரசம் சோறு சாப்பிடுவது அவசியம் என்பார்கள்.

ரசம் சாப்பிடுவதன் மூலம் வயிற்று உப்புசம், பசியின்மை, செரியாமை, சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலிய நோய்த் தொந்தரவுகள் காணாமல் போய்
விடும்.

வைட்டமின் சத்துகள்

சித்த மருத்துவ முறைப்படி, தினசரி உணவில் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த 9 பொருட்களும்
நம் உணவில் ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான். ரசத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. தயாமின், போலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் சி, நியாசின் மற்றும் ரீபோப்ளேவின் போன்ற சத்துகள் அதிகளவில் உள்ளன.

புளி

ரசத்தில் உள்ள புளிக்கரைசலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. புளியில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய்க் கிருமிகளிடம் இருந்து சருமத்தைக் காக்கும்.

மிளகு
மிளகு அற்புத சக்தி கொண்டது. மனிதர்களை வாட்டி வதைக்கும் மிகப் பயங்கர நோயான புற்று நோயை வரவிடாமல் இது தடுக்கிறது. மிளகில் உள்ள பைப்பரின், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். தசைவலி,மூட்டுவலி, மற்றும் நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்த வல்லது. மலட்டுத்தன்மையை போக்கும் வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

சீரகம்

சீரகம் நுரையீரலை சுத்தமாக்குகிறது. வயிற்று உப்புசம், தொண்டைச் சளியை போக்குகிறது. கண் புரை ஆஸ்துமா வராமல் தடுக்கிறது.உடல் சூட்டை தணிக்கிறது.

பூண்டு
வெள்ளைப்பூண்டு, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றை கட்டுப் படுத்துகிறது. இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும்
குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின்களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு,
காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

பெருங்காயம்
பெருங்காயம் வயிற்றுப் பிரச்னைகளை தீர்ப்பதுடன் வலிப்பு நோய் வராமலும், அபார்ஷன் ஆகாமலும் தடுக்கிறது. புரதமும், மாவுச்சத்தும் பெருங்காயத்தில் அதிகம் உள்ளது.

கறிவேப்பிலை
கறிவேப்பிலை குடல் உறுப்புகள் நன்றாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவற்றை குணப்படுத்தவும், உதவுகிறது. மேலும்,
கூந்தல் கருமை பெற உதவும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

கொத்துமல்லி
கொத்துமல்லிக் கீரை சிறுநீரை நன்கு வெளியேற்றுகிறது.உடல் சூடு, நாக்கு வறட்சியை நீக்குகிறது.கண்களின் பார்வைத் திறனை அதிகமாக்குகிறது. மாதவிடாய் கோளாறுகள் வரவிடாமல்
தடுக்கிறது. கொத்துமல்லிக்கீரை சிறுநீரை நன்றாக வெளியேற்றுகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது. கண்களின் பார்வைத் திறனை
அதிகரிக்கிறது.

கடுகு
ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ரசத்தில் புளியின்
அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

இஞ்சி
தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும்
குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது.

கொரோனா தொற்று காலம், வர உள்ள மழைக்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நம் உணவில் ரசம் அவசியம் என்பதை சொல்லவும் வேண்டுமோ…?

-வைதேகி

மாவட்ட செய்திகள்

Most Popular

தஞ்சாவூர்: 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கோரி எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரை கண்டித்து, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி...

கோவை: காந்திய சிந்தனைகளை பரப்பும், காங்கிரஸ் மக்கள் யாத்திரை

கோவையில் பொதுமக்களிடையே காந்திய சிந்தனைகளை கொண்டு சேர்க்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் காந்திய மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

உடல்நிலை சரியில்லை என்ற தகவல் உண்மைதான்; அரசியல் நிலைப்பாட்டை கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பேன் என ரஜினி விளக்கமளித்த நிலையில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசியளவில் ட்ரெண்டாகிவருகிறது.

கடலூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், செல்போன் திருடிய நபர் கைது

கடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!