ஐக்கிய அமீரகத்தில், முழுவதும் பெண்களால் இயக்கப்படும் நிறுவனம்!

 

ஐக்கிய அமீரகத்தில், முழுவதும் பெண்களால்  இயக்கப்படும் நிறுவனம்!

தற்போது பெண்கள் வேலைக்குச் செல்வது, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இயல்பான ஒன்று. ஆனால், வளைகுடா நாடுகளில் இன்னமும் பெண்களுக்கு பல கட்டுபாடுகள் உள்ளன.

அண்மையில், ஐக்கிய அமீரக நாடுகளில் பெண்களுக்கு சில தளர்வுகளை அறிவித்திருந்தனர். பெண்களும் வேலைகளுக்குச் செல்லலாம் என்பது அவற்றுள் முக்கியமானது. இந்த அறிவிப்பினால் அந்நாட்டு பெண்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தில், முழுவதும் பெண்களால்  இயக்கப்படும் நிறுவனம்!

இந்த நிலையில், பேரிச்சம்பழம் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று பெண் தொழிலாளர்களைக் கொண்டு முழு நிறுவனத்தையும் இயக்கி வருகிறது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர், பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில், தன் நிறுவனத்தில் நிர்வாகம் முதல் பேக்கிங், ஏற்றுமதி என அனைத்து துறைகளிலும் முழுவதும் பெண்களையே நியமித்துள்ளார்.

‘நாங்கள் அனைத்து பெண்களும் சேர்ந்து பணி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். சவுதி அரேபிய பெண்கள் எந்த துறையிலும் சாதனை செய்வோம் என ’ என அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

-இராகவேந்திரன்