ஆந்திராவில் பேருந்து சேவை தொடக்கம்

 

ஆந்திராவில் பேருந்து சேவை தொடக்கம்

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக தளர்வுகளை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து மாநிலங்களும் போக்குவரத்து சேவையை தொடங்கி உள்ளன. இந்த நிலையில் ஆந்திராவின், விஜயவாடா நகரில் தற்போது போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பேருந்து சேவை தொடக்கம்

பேருந்துகளில் அமர்வதற்கான வழிகாட்டுதல்களில், இரண்டு இருக்கைகள் உள்ள இடங்களில் ஒரு இருக்கையில் மட்டும் அமர்வது போல அடையாள குறியீடு போடப்பட்டுள்ளது. மூன்று இருக்கை உள்ள இடங்களில் நடு இருக்கையை இடைவெளி விடும் வகையில் அடையாளம் இடப்பட்டுள்ளது. நகரப் பேருந்துகளில் இந்த அடையாளம் இடப்பட்டுள்ளன.

இரண்டு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகளில் இந்த முறை கடைபிடிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல பேருந்துகளில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படும் என்றும், முகக் கவசம் இல்லை என்றால் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.