இரவில் சாலையில் சென்ற திருவல்லிக்கேணி பெண்ணிடம் சிறுவன்செய்த காரியம்! இதற்கு ‘பயிற்சி’வேற எடுத்துருக்கியா என்று போலீஸ் அடி

இரவில் சாலையில் சென்ற திருவல்லிக்கேணி  பெண்ணிடம்  சிறுவன்செய்த காரியம்! இதற்கு ‘பயிற்சி’வேற எடுத்துருக்கியா என்று போலீஸ் அடி

சென்னை பாரிமுனையில் உள்ள தனியார்மருத்துவமனையில் உதவியாளராக இருந்து வரும் லட்சுமி என்ற பெண், வழக்கம் போலவே பணி முடிந்து இரவில் திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். பார்த்தசாரதி தெருவில் இரவு 8 மணிக்கு நடந்து சென்றபோது, பின்னால் யாரோ ஒருவர் தன்னை பின்தொடர்வது போல உணர்ந்து வேக வேகமாக நடந்தார்.

அவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னை ஒருவர் பின் தொடர்கிறார் என்பது தெரிந்ததும், அவர் திடீர் என்று திரும்பிய போது, கொஞ்சமும் எதிர்பார்த்திராத வகையில், ஒரு சிறுவன் அந்தப்பெண்ணின் மேல் பாய்வது போல் வந்தான். பயத்தில் கீழே விழப்போன அப்பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். அதிர்ச்சியில் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் அப்பெண். கொஞ்ச தூரம் ஓடிய அச்சிறுவன், வேறொருவரிடம் தங்கச்சங்கிலியை கொடுத்துவிட்டு ஓடி மறைந்துவிட்டான்.

இரவில் சாலையில் சென்ற திருவல்லிக்கேணி  பெண்ணிடம்  சிறுவன்செய்த காரியம்! இதற்கு ‘பயிற்சி’வேற எடுத்துருக்கியா என்று போலீஸ் அடி

இதுகுறித்து அப்பெண் அப்போதே ஐஸ் அவுஸ் போலீசில் புகார் அளித்ததும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச்சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்று அடையாளம் தெரிந்தது. அவனிடம் நடத்திய விசாரணையில், அச்சிறுவனுக்கு லீடராக இருந்த விஜய், சக்திவேலுவும் சிக்கினர்.

இந்த இருவரும்தான் செயின் பறிக்கிறது என்று அச்சிறுவனுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் என்று தெரியவந்ததும், ’’இதுக்கு பயிற்சி வேற எடுத்துருக்கியா’’ என்று கேட்டு, செம்மையாக கவனித்தது போலீஸ்.