காவல்துறை வெளியிட்ட ‘சலாம் சென்னை’ குறும்படம்

 

காவல்துறை வெளியிட்ட ‘சலாம் சென்னை’ குறும்படம்

கொரோனா காலத்தில் களப்பணி ஆற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக “சலாம் சென்னை” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. சென்னை காவல்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தினை வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டார்.

காவல்துறை வெளியிட்ட ‘சலாம் சென்னை’ குறும்படம்

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் தமிழ் திரைப்பட்ட நடிகர் நடிகைகள் இந்த குறும்படத்தில் பங்கேற்றுள்ளனர்.

காவல்துறை வெளியிட்ட ‘சலாம் சென்னை’ குறும்படம்

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,சென்னையில், 2 ஆயிரத்து 400 போலீசார் கொரோனா தொற்றுக்கு ஆளானபோதும், காவல்துறையினர் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறினார். ஐபிஎல் கிரிக்கெட்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை கொரோனா சூழல் காரணமாக காணமுடியாமல் போன சென்னை மக்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு வீடியோவில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை இணைத்ததாக தெரிவித்தார்.

காவல்துறை வெளியிட்ட ‘சலாம் சென்னை’ குறும்படம்

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான், நிறைய பாடல்களை தான் இசை அமைத்திருந்தாலும், மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த விழிப்புணர்வு பாடலுக்கு இசை அமைத்தது தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக கூறினார். இந்த நிகழ்ச்சியில், காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.