மதுரவாயல் பைபாசில் மீண்டும் நடப்பட்ட பாஜக கொடிக்கம்பம்

 

மதுரவாயல் பைபாசில் மீண்டும் நடப்பட்ட  பாஜக  கொடிக்கம்பம்

மதுரவாயல் மேம்பாலம் அருகே பாஜக சார்பில் நடப்பட்ட 70 அடி கொடிக்கம்பத்தினை மாநகராட்சி நேற்றிரவு அகற்றி இருந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் அதே இடத்தில் கொடிக்கம்பம் நட்டு பாஜவினர் கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரவாயல் பைபாசில் மீண்டும் நடப்பட்ட  பாஜக  கொடிக்கம்பம்

பிரதமர் மோடியின் 70 வது பிறந்த நாள் நேற்று முந்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி சென்னை, மதுரவாயல் பைபாஸ் மேம்பாலம் அருகே பாஜக சார்பில் புதிதாக 70 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மதுரவாயல் பைபாசில் மீண்டும் நடப்பட்ட  பாஜக  கொடிக்கம்பம்

கொடி கம்பம் மிக உயரமாக இருப்பதால் ஓட்டுநர்கள் கவனம் சிதற வாய்ப்புள்ளது என பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில், சாலை விதிகளை மீறி, அனுமதி இன்றி நடப்பட்டுள்ளதாக கூறி நேற்று நள்ளிரவு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அங்கிருந்த கல்வெட்டை இடித்து சரி செய்ததுடன், 70 அடி கொடிக்கம்பத்தையும் அப்புறப்படுதினர்.

மதுரவாயல் பைபாசில் மீண்டும் நடப்பட்ட  பாஜக  கொடிக்கம்பம்

பாஜக சார்பில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் ஒரே நாளில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க நிர்வாகிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த நிலையில், இன்று காலை கொடிகம்பம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டு சென்ற பாஜகவினர், அங்கு சிறிய அளவிலான கொடி கம்பம் நட்டு கொடியை ஏற்றினார்கள். இதனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கொடிக்கம்பம் நட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.