ஃப்ரீ பயர் கேம்’க்கு அடிமையான சிறுவன்: அடுத்த கட்டத்துக்கு போவதற்காக செய்த காரியத்தால் அதிர்ந்த பெற்றோர்!

ஃப்ரீ பயர் கேம்’க்கு அடிமையான சிறுவன்: அடுத்த கட்டத்துக்கு போவதற்காக  செய்த காரியத்தால்  அதிர்ந்த பெற்றோர்!

ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான சிறுவன் அந்த விளையாட்டின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக செய்த காரியத்தால் பெற்றோர் அதிர்ந்து போயிருக்கிறார்கள். இதுமாதிரியான காரியத்தில் இனியும் ஈடுபடக்கூடாது என்று அச்சிறுவனுக்கு நூதன தண்டனையும் வழங்கி இருக்கிறார்கள்.

ஃப்ரீ பயர் கேம்’க்கு அடிமையான சிறுவன்: அடுத்த கட்டத்துக்கு போவதற்காக  செய்த காரியத்தால்  அதிர்ந்த பெற்றோர்!

வங்கி கணக்கு புத்தகத்தில் நெடுநாளாக எண்ட்ரி போடாமல் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், சமீபத்தில் வங்கியில் எண்ட்ரி போடச்சொல்லி பார்த்ததும் அதிர்ந்து போனார். வங்கிக்கணக்கில் இருந்து 90 ஆயிரம் எப்படி குறைந்தது என்று குழம்பிப்போனார். ’’கணக்கில் இருந்து பணம் எடுத்தால் மேசேஜ் வருமே சார்’’ என்று கேட்டதற்கு, ’’உங்க மொபைலுக்கு மெசேஜ் வந்திருக்குமே ’’என்று பதிலளித்திருக்கிறார்கள்.

ஃப்ரீ பயர் கேம்’க்கு அடிமையான சிறுவன்: அடுத்த கட்டத்துக்கு போவதற்காக  செய்த காரியத்தால்  அதிர்ந்த பெற்றோர்!

செல்போனை செக் பார்த்ததில் மெசேஜ் எதுவும் இல்லை. அப்போதுதான் செந்தில்குமாருக்கு பொறி தட்டியது. எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கும் 12வயது மகனின் நினைவு வந்து, அவனிடம் விசாரித்தபோது, ஃப்ரீ பயர் கேம்-க்கு அடிமையாகி இருப்பதும், அந்த ஆன்லைன் விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காகத்தான், 90 ஆயிரம் பணத்தை ஏடிஎம் கார்டு மூலமாக எடுத்திருக்கிறான் என்பதும் தெரியவந்தது. பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்று பயந்து செல்போனுக்கு வந்த மெசேஜையும் டெலீட் செய்திருக்கிறான் சிறுவன்.

’’சின்னபிள்ளை என்று செல்போனை கையில் கொடுத்தால் நீ இந்த வேலை எல்லாம் செய்யுறீயா’’என்று சொல்லிவிட்டு, ’’இனி இப்படி ஒரு தவறை செய்யாமல் இருக்க…’’என்று சொன்னவர், 1,2,3 என 90 ஆயிரம் வரை எழுதச்சொல்லி நூதன தண்டனை கொடுத்திருக்கிறார்.