ஒரு ஓடிபி வரும்; அதச்சொன்னா உங்க அக்கவுண்டுக்கு லோன் அமவுண்ட் வரும் -இப்படிச்சொல்லி இருக்கும் பணத்தையும் ஆட்டைய போட்ட கும்பல்

 

ஒரு ஓடிபி வரும்; அதச்சொன்னா உங்க  அக்கவுண்டுக்கு லோன் அமவுண்ட் வரும் -இப்படிச்சொல்லி இருக்கும் பணத்தையும் ஆட்டைய போட்ட கும்பல்

’சார், உங்களுக்கு லோன் தேவைப்படுகிறதா? ஆன்லைன் மூலமாகவே உடனே உங்கள் வங்கியில் பணம் செலுத்தப்படும்’ என்று கேட்டு, கடந்த 9ம் தேதி டாட்டா கேபிடல் நிறுவனத்தில் இருந்து சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவருக்கு ஒரு போன் கால் வந்தது. பண தேவையில் இருந்த அவர், ‘ஆமாம்’ என்று சொன்னதும், அவரது ஆதார்,பான், வங்கி விபரங்களை கேட்ட அப்பெண், ‘’உங்க மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும். அதைச்சொல்லுங்க. அதை சொன்னதும் உங்க அக்கவுண்டுக்கு கடன் தொகை வந்துவிடும்’’என்று சொல்லவும், அவரும் அதை நம்பி, அப்படியே செய்ய, அடுத்த சில நிமிடங்களில் அவர் வங்கிக்கணக்கில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது.

ஒரு ஓடிபி வரும்; அதச்சொன்னா உங்க  அக்கவுண்டுக்கு லோன் அமவுண்ட் வரும் -இப்படிச்சொல்லி இருக்கும் பணத்தையும் ஆட்டைய போட்ட கும்பல்

அதன்பிறகு அந்த பெண்ணை தொடர்கொள்ள முயன்றால், முடியவில்லை. இருந்த பணத்தையும் இழந்துவிட்ட அந்த நபர் அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார், அந்த நபருக்கு வந்த போன் நம்பரை தொடர்புகொண்டபோது, நாமக்கல் குமாரபாளையத்தில் சிக்னல் காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் குமாரபாளையம் விரைந்தனர்.

ஒரு ஓடிபி வரும்; அதச்சொன்னா உங்க  அக்கவுண்டுக்கு லோன் அமவுண்ட் வரும் -இப்படிச்சொல்லி இருக்கும் பணத்தையும் ஆட்டைய போட்ட கும்பல்

சிக்னல் காட்டிய இடத்தில், பெதர் லைக் டெக் என்ற பெயரில் தனியார் கால் சென் டர் ஒன்று இயங்கி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கால் சென் டரில் நிறைய ஆண்களும், பெண்களும் வேலை செய்துகொண்டு இருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அது போலி கால்செண்டர் என்பதும், வங்கிகளின் பெயரில் மக்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நிர்வாகிகளான குமரேசன், விவேக் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரித்ததில், ‘’ஆன்லைன் மூலமாக வங்கிக்கடன் என்று பேசி அவர்கள் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்வதுதான் எங்களின் தொழில். இதற்காக நிறைய ஆண், பெண்களை 8 ஆயிரம், 12 ஆயிரம் மாத சம்பளத்தில் நியமித்திருக்கிறோம். அவர்களிடம் நாங்கள் கொடுக்கும் செல்போன் நம்பர்களுக்கு போன் செய்து காரியத்தை முடித்து விடுவார்கள். இது மோசடி என்பது அவர்களுக்கே தெரியாது. விபரங்கள் கேட்பது வரைக்கும் தான் அவர்களுடைய வேலை. பணத்தை உருவி எடுப்பது எங்களுடைய வேலை’’ என்று கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் சொன்னார்கள்.

வங்கிகள் கடன் வழங்குவதற்கும், கடனை வசூலிப்பதற்கும் ஏஜெண்டுகள் வைத்திருக்கின்றன. அந்த ஏஜெண்டுகள் கால்சென்டர் மூலமாக மக்களுக்கு கால் செய்து, கடன் தேவையா என்று கேட்டு, கடன் தேவைப்படுவோருக்கு தக்க ஆவணங்களை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைப்பார்கள். இதில், ஒருசில போலிகளும் உருவாகிவிடுவதால் மக்களும் ஏமாந்து போய், தங்களது பணத்தை இழந்து நிற்கிறார்கள்.