கணவனைத்தேடி வீட்டுக்கு வரும் ஆண்கள்! அதிர்ந்து போய் போலீசுக்கு போன இளம்பெண்!

 

கணவனைத்தேடி வீட்டுக்கு வரும் ஆண்கள்! அதிர்ந்து போய் போலீசுக்கு போன இளம்பெண்!

வேறு வேறு நூலகங்களில் பணிபுரிந்த அந்த இளம்பெண்ணையும், இளைஞரையும் இணைத்தது காதல். காதலோடு நின்றுவிடாமல் கல்யாணம் வரை சென்றது. கடந்த 2019ம் ஆண்டில் இருவரும் திருமணமும் செய்து கொண்டு குஜராத் காந்திநகர் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஒரு வருடம் இவர்கள் திருமணம் வாழ்வு மகிழ்ச்சியாகவே கடந்திருக்கிறது.

ஆனால்,சமீப காலமாகவே கணவனின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்களை உணர்ந்திருக்கிறார் அந்தப்பெண். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக நூலகப்பணி போய்விட்டது என்று கூறி வீட்டிலேயே கணவன் இருந்துள்ளார். இன்னும் ஒரு அதிர்ச்சி இருக்குமென்பதையும், அது பேரதிர்ச்சியாக இருக்குமென்பதையும் அப்போதைக்கு நினைத்துக்கூடா பார்த்திருக்க மாட்டார் அந்தப்பெண்.

வேலை போய்விட்டதால் வீட்டில் சும்மா கணவனைத்தேடி நிறைய ஆண்கள் வருவதும், அவர்கள் வெகுநேரமாக அறையில் தாளிட்டுக்கொண்டு இருப்பதும் அப்பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கணவனைத்தேடி வீட்டுக்கு வரும் ஆண்கள்! அதிர்ந்து போய் போலீசுக்கு போன இளம்பெண்!

ஒருநாள் கணவனும் அவரைத்தேடி வந்த ஆணும் அறைக்குள் இருந்தபோது, எதேச்சையாக கணவனின் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அந்த பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார். தன் கணவன் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்தபோது அழுகையே வந்துவிட்டது அப்பெண்ணுக்கு.

இதுகுறித்து கணவனிடம் கேட்டபோது, ‘’திருமணத்திற்கு முன்பே ஆண்களுடன் இப்படி உறவில் இருந்து வருவது வழக்கம். அதுதான் எனக்கு பிடிக்கும். பெண்களுடன் உறவு கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் ஊரார் ஒரு மாதிரியாக சொல்லிவிடுவார்களே என்றுதான் உன்னை காதலித்து கல்யாணம் செய்துகொண்டேன். அலுவலகத்திலும் எனக்கு நிறைய ஆண்களுடன் உறவு உண்டு. சிலருடன் ஏற்பட்ட பிரச்சனையில்தான் என் வேலையே போய்விட்டது. நான் வேலைக்கு போகாததால்தான் என்னைத்தேடி வீட்டுக்கு வருகிறார்கள்’’என்று சொன்னதைக்கேட்டு கண்ணீர் விட்ட அப்பெண், கணவனின் வீட்டாரிடம் இதுகுறித்து முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த பழக்கத்தில் இருந்து கணவனை மீட்டு விடலாம் என்று அப்பெண் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்ததால், வேறு வழியின்றி, தன்னை ஏமாற்றிய கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.