”விரல் ரேகை மூலமாக கணிணியில் வாட்ஸ் அப் வசதி” வாட்ஸ் அப் நிறுவனம் திட்டம்

 

”விரல் ரேகை மூலமாக கணிணியில் வாட்ஸ் அப் வசதி” வாட்ஸ் அப் நிறுவனம் திட்டம்

செல்போனில் விரல் ரேகை பதிவிட்டு, கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துவதை போல, கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம் என்பது இன்றும் பலருக்கும் தெரியாத ஒன்று. இதனை பயன்படுத்தும்போது, வாட்ஸ் அப்பின் வலைதளம், கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்ய கேட்கும். அப்போது செல்போனில் உள்ள சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் கணக்கில் உள்ளே சென்று ”வாட்ஸ் அப் வெப்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உள்ள ஸ்கேனரை கொண்டு கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்தால் டெஸ்க்டாப் வாட்ஸ் அப் செயலி திறக்கும். கணிணியில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த இந்த முறை மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.

”விரல் ரேகை மூலமாக கணிணியில் வாட்ஸ் அப் வசதி” வாட்ஸ் அப் நிறுவனம் திட்டம்

இந்நிலையில் இதற்கு கூடுதல் நேரம் ஆகிறது என்பதுடன், ஒருவருடயை செல்போன் கிடைத்தால், வாட்ஸ் அப் டெஸ்க்டாப்பை திறந்துவிடலாம் என்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், விரல் ரேகை பதிவிடுவதன் மூலம், கணிணியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

”விரல் ரேகை மூலமாக கணிணியில் வாட்ஸ் அப் வசதி” வாட்ஸ் அப் நிறுவனம் திட்டம்

இதன்படி, கணிணியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும்போது, கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்வதற்கு பதிலாக, தங்கள் செல்போனில் விரல் ரேகையை பதிவிட்டாலே, கணிணியில் உள்ள வாட்ஸ்அப் செயலி திறந்துவிடும் என சொல்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இந்த புதிய வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என எந்த ஒரு தகவலும் வெளியாக வில்லை.