பொன்மலையில் இறுதிப்போராட்டம்! மாணவிகள், பெண்கள் பங்கேற்பு!

பொன்மலையில் இறுதிப்போராட்டம்! மாணவிகள், பெண்கள் பங்கேற்பு!

பொன்மலை பணிமனையில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் 7 வது நாளாக முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடைபெற்றது. 7வது நாளான இன்றைய இறுதிப்போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் பங்கேற்றார்.

பொன்மலையில் இறுதிப்போராட்டம்! மாணவிகள், பெண்கள் பங்கேற்பு!
பொன்மலையில் இறுதிப்போராட்டம்! மாணவிகள், பெண்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதைக் கண்டித்தும், குறிப்பாக பொன்மலை ரயில்வே பணிமனையில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் பணியாற்றுவதை கண்டித்தும், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு கடந்த 11ம் தேதி முதல் ஒரு வார காலம் மறியல் போராட்டம் நடத்திட இருப்பதாக பெ.மணியரசன் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 11ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு பணிமனையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்மலையில் இறுதிப்போராட்டம்! மாணவிகள், பெண்கள் பங்கேற்பு!

7வது நாள் மற்றும் இறுதி நாளான இன்று தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் போராட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் மதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் உணர்வாளர்கள், மாணவிகள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு , மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.