ஆதார் இல்லாததால் வேலை கிடைக்கல; குழந்தையுடன் தவிப்பதாக இரக்கம் சம்பாதிக்க…சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

 

ஆதார் இல்லாததால் வேலை கிடைக்கல; குழந்தையுடன் தவிப்பதாக இரக்கம் சம்பாதிக்க…சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் கொத்தனார் வேலை செய்து வரும் பப்லு, ராயபுரத்தில் ரயில் நிலையம் அருகே தற்காலிக குடியிருப்பில் தங்கி இருக்கிறார். இவருடன் சமீபத்தில் பழக்கம் வைத்திருந்த சுனில் என்ற இளைஞன், பப்லுவின் பெண் குழந்தைக்கு சாப்பாடு வாங்கிக்கொடுப்பதாக சொல்லி தூக்கிச்சென்றிருக்கிறான். ஆனால், அதன்பிறகு அவன் திரும்பவே இல்லை. மகள் மார்ஜினாவும் வரவே இல்லை.

ஆதார் இல்லாததால் வேலை கிடைக்கல; குழந்தையுடன் தவிப்பதாக இரக்கம் சம்பாதிக்க…சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கடந்த 6ம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு பின்னர், பப்லு போலீசிடம் புகார் தெரிவிக்க, ராயபுரம் போலீசார் விசாரணையில் இறங்கினர். ராயபுரம் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். குழந்தை கடத்தல் என்று சுனிலின் புகைப்படத்தை போலீசார் ஒட்டினர். அப்படியும் சுனில் சிக்கவில்லை.

இந்நிலையில், சுனில் விட்டுச்சென்ற ஒரு பை பப்லு வீட்டில் தென்படவே, அதில் ஒருபேப்பரில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அஸ்ஸாம் நபர் பேசி இருக்கிறார். ஆனால் அவர் உடனே செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதால்,அஸ்சாம் மாநில போலீசாரின் உதவியுடன் அந்த நபரிடம் விசாரித்ததில், சென்னை அடுத்த செங்கல்பட்டு நாவலூரில் சுனில் இருப்பதும், அவனுடம் குழந்தை மார்ஜினா இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நாவலூர் விரைந்தனர். போலீஸ் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சுனில் தலைமறைவாகிவிட்டான்.

மார்ஜினாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர் போலீசார்.

ஆதார் அட்டை இல்லாததால், தனக்கு யாரும் வேலை கொடுக்க மறுக்கிறார்கள் என்பதால், குழந்தை காட்டி, குழந்தை வைத்துக்கொண்டு சாப்பிட வழியில்லாமல் தவிப்பதாக சொல்லி, வேலை கேட்பதற்காகவே சுனில் குழந்தையை கடத்திச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.