“வாய் புளித்ததோ; மாங்காய் இனித்ததோ”- போகிற போக்கில் ஸ்டாலின் சொல்லும் பச்சைப்பொய்கள்! முகம் சுழிக்கும் திமுகவினர்!

“வாய் புளித்ததோ; மாங்காய் இனித்ததோ”- போகிற போக்கில் ஸ்டாலின் சொல்லும் பச்சைப்பொய்கள்! முகம் சுழிக்கும் திமுகவினர்!

‘திமுக ஆட்சிக்கு வந்த எட்டே மாதங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’
-இப்படி திருவாய் மலர்ந்திருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வரும் என கனவு காண்பதற்கு அந்தக் கட்சியினருக்கு 100% உரிமை உண்டு. ஆனால் அந்த கனவு பலிப்பதற்கான சூழல் தமிழகத்தில் தற்போது இருக்கிறதா?

“வாய் புளித்ததோ; மாங்காய் இனித்ததோ”- போகிற போக்கில் ஸ்டாலின் சொல்லும் பச்சைப்பொய்கள்! முகம் சுழிக்கும் திமுகவினர்!

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் சாதனை பயணத்தைப் பார்த்து திமுகவினரே உதட்டைப் பிதுக்கும் நிலைதான் உள்ளது.

கடும் நிதி நெருக்கடி இருந்தபோதும் இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில்தான் எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள், தொழிலாளிகள், இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள் என சமூகத்தின் சகல தரப்பினரும் எடப்பாடி அரசின் திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர். அதுபோலவே மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, விலைவாசி போன்றவை கட்டுக்குள் இருக்கின்றன.

“வாய் புளித்ததோ; மாங்காய் இனித்ததோ”- போகிற போக்கில் ஸ்டாலின் சொல்லும் பச்சைப்பொய்கள்! முகம் சுழிக்கும் திமுகவினர்!

கொரோனா பேரிடரை வெற்றிகரமாகக் கையாண்டு வருவதுடன் இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலும் பெருமளவு அந்நிய முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் பெருக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது இன்றைய அதிமுக அரசு.

“வாய் புளித்ததோ; மாங்காய் இனித்ததோ”- போகிற போக்கில் ஸ்டாலின் சொல்லும் பச்சைப்பொய்கள்! முகம் சுழிக்கும் திமுகவினர்!

நிலைமை இவ்வாறு இருக்க, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிமாற்றம் என திமுகவினர் கூறுவது கற்பனையின் உச்சம். கள நிலவரங்களை உற்று நோக்கும்போது எடப்பாடி அரசு தொடர்வதற்கான வாய்ப்புகளே உள்ளன.

சரி, ஒரு வாதத்திற்காக மீண்டும் திமுக ஆட்சி அமைவதாகவே வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா என்ன! மாணவர்களை மிகக் கடுமையாகப் பாதித்திருக்கும் இந்த நீட் தேர்வு, மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசாலேயே கொண்டுவரப்பட்டது என்கிற உண்மையை யாரும் மறந்துவிடத் தயாராக இல்லை.

இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதிலும் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீட் தேர்வு பலமுறை நீதிமன்றங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இறுதியாக உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது. இதன் பின்னர் 7 மாநிலங்களின் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட அதன் பின்னரே நீட் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது.

இதுதான் இன்றைய நிலை. இதில் ஸ்டாலின் சொல்வது போல திமுக ஆட்சி அமைந்தால் கூட என்ன செய்துவிட முடியும்! எதுவும் செய்ய இயலாது என்பதுதான் எதார்த்தம். இந்த அடிப்படை உண்மையைக் கூட புரிந்துகொள்ளாமல், ‘ வாய் புளித்ததோ; மாங்காய் இனித்ததோ’ என போகிற போக்கில் ஸ்டாலின் சொல்லும் பச்சைப் பொய்களை பொதுமக்கள் அல்ல, திமுகவினரே நம்பத் தயாராக இல்லாமல் முகம் சுழிக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.