”என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: எச்சரிக்கையாக இருங்கள்’’- அஜீத்குமார் பரபரப்பு அறிக்கை

”என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: எச்சரிக்கையாக இருங்கள்’’- அஜீத்குமார் பரபரப்பு அறிக்கை

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் நடிகர் அஜீத்குமார். அடுத்தவர் விசயங்களில் எதிலும் தலையிட விரும்பாத ‘தலை’யாக இருக்கும் அவர் விஷயத்தில்தான் பலரும் மூக்கை நுழைக்கிறார்கள்.

பொதுவாகவே ஒரு பிரபலம் என்றால், ‘அவரை எனக்கு தெரியும். நான் அவரிடம் அதை பெற்றுத்தருகிறேன்’ என்று சொல்லும் நபர்கள் நிறைய உண்டு. அதிலும் சினிமா பிரபலங்கள் விசயத்தில் சொல்லவே வேண்டாம். சமூக வலைத்தள கணக்குகளில் தொடங்கி, சகல விசயங்களிலும் ஏகப்பட்ட போலிகள் இருந்து அவர்களுக்கு தொல்லைகள் கொடுக்கும். ‘நான் அவன் இல்லை’ என்கிற ரீதியில் பிரபலங்களும் மறுப்பு அறிக்கை கொடுக்க வேண்டியதாகிவிடும்.

”என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: எச்சரிக்கையாக இருங்கள்’’- அஜீத்குமார் பரபரப்பு அறிக்கை

அஜீத்குமாரும் அப்படி ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறார். தன்னுடைய மேலாளர் என்று சொல்லிக்கொண்டு யாரோ, ஏதோ குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அதனால்தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அஜீத்குமார் சார்பில் அவரது சட்ட ஆலோசகர் எம்.எஸ்.பரத் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ‘’நான் அஜீத்குமாரின் அதிகார பூர்வ சட்ட ஆலோசகர். இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்சிக்காரர் அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும்.

”என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: எச்சரிக்கையாக இருங்கள்’’- அஜீத்குமார் பரபரப்பு அறிக்கை

சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிகாரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலை படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்திற்கு வந்துள்ளது.

இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும் அவர மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகார பூர்வமாக அறிவிக்கிறார்.

”என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: எச்சரிக்கையாக இருங்கள்’’- அஜீத்குமார் பரபரப்பு அறிக்கை

மேலும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்த தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்ரும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என்கட்சிகாரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.