கொரோனாவிலிருந்து மீண்டு வந்து மீண்டும் பணியில் சேர்ந்த வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டருக்கு வரவேற்பு

 

கொரோனாவிலிருந்து மீண்டு வந்து மீண்டும் பணியில் சேர்ந்த வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டருக்கு வரவேற்பு

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் வயது பேதமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்களை தாக்கி வருகிறது.மேலும் முன்கள பணியாளர்களான போலீசார் டாக்டர்கள் செவிலியர்கள் அரசு உயரதிகாரிகள் போன்றோரையும் தாக்கி வருகிறது.

இந்நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி கொரோனவைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார்.

கொரோனாவிலிருந்து மீண்டு வந்து மீண்டும் பணியில் சேர்ந்த வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டருக்கு வரவேற்பு

நேற்று அவருக்கு மேற்கொண்ட சோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இதைத்தொடர்ந்து இன்று இன்ஸ்பெக்டர் மீண்டும் பணிக்கு திரும்பினார். இதற்காக இன்று வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்த இன்ஸ்பெக்டருக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம் தலைமையில் போலீசார் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். உடன் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் இருந்தார். கருங்கல் பாளையம் இன்ஸ்பெக்டர் கடந்த சில நாளுக்கு முன்பு தான் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து மீண்டும் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.