அவுட் ஸ்டாண்டிங் என்ற நவீன பெயரால் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு! மின் வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அவுட் ஸ்டாண்டிங் என்ற நவீன பெயரால் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு!   மின் வாரியத்தை  கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட பிறகு தன்னிச்சையான உத்தரவுகளை பிறப்பிக்கும் மின் வாரிய தலைவரை கண்டித்து, கடலூர் கேப்பர் மலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் கடலூர் மாவட்ட மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சிஐடியு சங்கத்தின் தலைவர் டி பழனிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவுட் ஸ்டாண்டிங் என்ற நவீன பெயரால் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு!   மின் வாரியத்தை  கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தொழிலாளர்கள் கொரனா சமயத்தில் மின்வாரிய பணிகளை தடை இல்லாமல் செய்து பணியின் போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சத்தை வழங்கிட வேண்டும், தொழிற்சங்க விரோத போக்கை கடைபிடிக்கும் நடவடிக்கையை கண்டித்தும் துணை மின் நிலையங்களை குத்தகை மற்றும் அவுட் ஸ்டாண்டிங் என்ற நவீன பெயரால் தனியார் மயமாக்குவதை கண்டித்தும் மத்திய மாநில அரசுகள் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அவுட் ஸ்டாண்டிங் என்ற நவீன பெயரால் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு!   மின் வாரியத்தை  கண்டித்து ஆர்ப்பாட்டம்

இதில் 200க்கும் மேற்பட்ட மின்சாரத் துறையில் பணிபுரியும் ஊழியர்களும், அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.