சென்னை ஓட்டல்களை கலக்கும் ‘வடகறி

 

சென்னை ஓட்டல்களை கலக்கும் ‘வடகறி

சென்னை மாநகரத்து நடுத்தர ஓட்டல்களின் ‘ஸ்பெஷல்’ வடகறி.காலையில் எந்த ஓட்டல்களுக்குச் சென்றாலும் இட்லி, தோசை, சப்பாத்திக்கு வழக்கமான சாம்பார், சட்னியுடன் இந்த வடகறியும் தருவார்கள்.பிளாட்பார கடைகளில் வடகறியுடன் இட்லி, தோசை சாப்பிடும் சுவையே அலாதியானது. சென்னை ஸ்பெஷலான இந்த வடகறியை தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் வீட்டிலும் சமைத்து, குடும்பத்தினரையும் மற்றும் விருந்தினர்களையும் அசத்தலாம்.

சென்னை ஓட்டல்களை கலக்கும் ‘வடகறி


தேவையான கடலைப் பருப்பை எடுத்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது சோம்பு , சீரகம், பச்சை மிளகாய் மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை மிக்சியில் போட்டு மொரு,மொருப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை வடைபோல் தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும். ஆறியதும் சிறு, சிறு துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.


அடுத்த கட்டமாக சிறிது தக்காளியை தோலுரித்து மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.,. தக்காளியின் தோலை எளிதாக நீக்க சிறிது வென்னீரில் கொதிக்க வைத்து எடுத்தால் போதும். இனி வடகறி செய்முறையைக் காணலாம்.

சென்னை ஓட்டல்களை கலக்கும் ‘வடகறி


வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்., பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அரைத்து வைத்துள்ள தக்காளியையும் ஊற்றி வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், சேர்த்து ஒருகப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.அதில் தேங்காய்ப் பாலை ஊற்றி ,திக்கான பதம் வந்தவுடன் ,வடைகளை போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான வடகறி தயார்.