பாஜக எம்பி.க்கள் நடிக்கும் ராமாயண நாடகம்:அயோத்தியில் அரங்கேற்றம்

பாஜக எம்பி.க்கள் நடிக்கும் ராமாயண நாடகம்:அயோத்தியில் அரங்கேற்றம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் ‘லக்ஷ்மன் குயிலா’ என்ற இடம் இருக்கிறது. இந்த இடத்தில் 90 அடிக்கு 25 அடி என்ற அளவில் மிகப் பெரிய மேடை அமைக்கப்பட்டு, இன்று 17-ந் தேதி மாலை முதல், பிரமாண்ட ராமாயண நாடகம் நடக்கிறது. இந்த நாடகம் வரும் 25-ம் தேதி வரை தொடரும்.

பாஜக எம்பி.க்கள் நடிக்கும் ராமாயண நாடகம்:அயோத்தியில் அரங்கேற்றம்

“கொரனோ” காரணத்தால் இந்த நாடகத்தை மக்கள் நேரிடையாக பார்க்க முடியாது.அதற்குப் பதிலாக நாடகத்தை படம் பிடித்து சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், மற்றும் யூடியூப் வாயிலாக உடனுக்குடன் வெளியிட ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.

பாஜக எம்பி.க்கள் நடிக்கும் ராமாயண நாடகம்:அயோத்தியில் அரங்கேற்றம்

இந்த ராம்லீலாவில் டெல்லியின் வடகிழக்கு பாஜக எம்.பி மனோஜ் திவாரி அங்கதாகவும், கோரக்பூர் எம்.பி. மற்றும் போஜ்பூரி நடிகருமான ரவி கிஷான் பரதனாகவும், விந்து தாரா சிங் அனுமனாகவும், நடிக்க உள்ளனர். மேலும் ஒரு பாஜக எம்.பி. பர்வேஷ் ஷாஹிப் சிங் முக்கிய பங்காற்றுகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ராம்லீலாக்களை நடத்தி வரும் ‘மேரி மா’ பவுண்டேஷன் இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.