திடீர் பிரேக்கில் லாரியில் இருந்த இரும்புக்குழாய் காருக்குள் நுழைந்து குத்தியது

திடீர் பிரேக்கில் லாரியில் இருந்த இரும்புக்குழாய் காருக்குள் நுழைந்து குத்தியது

ஈரோடு சூளை முனியப்பன் கோவில் அருகில் இரும்பு குழாய் லோடு ஏற்றி சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநர் திடீரென்று பிரேக்கை அழுத்தியவுடன் லாரியிலிருந்த இரும்புக்குழாய் ஒரு கட்டுடன் நழுவி லாரியின் பின்பக்கத்தில் தொடர்ந்து வந்த காரின் முன்பக்க கண்ணாடியில் உள்ளே நுழைந்தது. இதில் ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

திடீர் பிரேக்கில் லாரியில் இருந்த இரும்புக்குழாய் காருக்குள் நுழைந்து குத்தியது

ஆகவே, அனைவரும் மிக கவனுத்துடன் நமக்கு முன்செல்லும் வாகனத்திற்கு 10 மீட்டர் இடைவெளிவிட்டு பின்தொடர்ந்து ஓட்டிசெல்லவும். இதுபோல் விபத்தை தவிர்க்கலாம் என்று சொல்லும் சமூக ஆர்வலர்கள், கனரக வாகனத்தில் ஏற்றும் லோடுகளை மிக கவனமாக மற்றவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தாத வகையில் கயிறுகளை நன்கு கட்டியவுடன் சரிபார்த்த பின்னரே வாகனத்தை இயக்கவும் என்று அறிவுறுத்துகின்றனர்.

திடீர் பிரேக்கில் லாரியில் இருந்த இரும்புக்குழாய் காருக்குள் நுழைந்து குத்தியது
திடீர் பிரேக்கில் லாரியில் இருந்த இரும்புக்குழாய் காருக்குள் நுழைந்து குத்தியது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தற்பொழுது நலமுடன் உள்ளார். பாதிப்படையச் செய்த தரப்பில் எந்த கவலையும் இல்லாமல் இதை பணத்தை கொடுத்து சரி செய்யவே முயன்றிருக்கிறார்கள். குற்ற உணர்வு இல்லாமல் நிறைய பேர் மிகவும் அஜாக்கிரதையாக, என்ன ஆகபோகுது கேஸ் போட்டாலும் ஃபைன் தானே என மெத்தனமாக இருக்கிறார்கள். தயவுசெய்து நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.