மத்திய அரசு திட்டங்களை விளக்க குமரி முதல் மெரினா வரையிலான யாத்திரை திருச்சி வந்தது!

 

மத்திய அரசு  திட்டங்களை விளக்க குமரி முதல் மெரினா வரையிலான யாத்திரை திருச்சி வந்தது!

கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை விளக்கி தொடங்கப்பட்ட குமரி முதல் மெரினா வரையிலான தொடர் பிரச்சாரம்- யாத்திரை தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைமையில் திருச்சி வந்தடைந்தது.

’கொரோனாவை வெல்வோம் மன உளைச்சல் நீங்கி வாழ்வோம்’ என்ற தலைப்பில் கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நல சட்ட திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை தொடர் பிரச்சாரம் யாத்திரை தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்று வருகிறது. குமரியில் தொடங்கிய பிரச்சார யாத்திரை இன்று திருச்சி பீமநகர் பகுதிக்கு வந்து அடைந்தது. இங்கு பிஜேபி பொதுக்குழு உறுப்பினர் ராமசுப்பு சால்வை அணிவித்து வரவேற்றார்.

மத்திய அரசு  திட்டங்களை விளக்க குமரி முதல் மெரினா வரையிலான யாத்திரை திருச்சி வந்தது!

தொடர்ந்து தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் இப்ராஹிம் பேசும்போது, கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் விவசாயிகள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து உள்ளது. கிராமங்களை சேர்ந்த 15 கோடி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் பெறும் வசதியை வழங்குவதற்கு ஆதார் திட்டம் துவங்கப்பட்டது, ஒவ்வொரு விவசாயிக்கும் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு  திட்டங்களை விளக்க குமரி முதல் மெரினா வரையிலான யாத்திரை திருச்சி வந்தது!

இந்த இடத்தின் கீழ் 72 ஆயிரம் கோடிக்கும் மேலான நிதி 9.5 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார். மேலும் பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பிரச்சார யாத்திரை தொடங்கி தொடர்ந்து மெரினா வரை இந்த பிரச்சார யாத்திரை செல்ல உள்ளது.