’’தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்’’-சரத்குமார் வேண்டுகோள்

 

’’தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்’’-சரத்குமார் வேண்டுகோள்

கொரோனா தொற்று சமயத்தில் சுகாதாரமான இடங்களுக்கு சென்று வந்தால் கூட, சானிடைசர் கொண்டு கைகளை அவ்வப்போது சுத்தம் செய்து வருகிறோம். ஆனால், சுகாதார பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்வது வேதனை அளிக்கிறது என்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார்.

இதுகுறித்து அவர் மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தெரு ஓர குப்பைகளை அகற்றும் போதும், வீடுகள் தோறும் குப்பைகளை சேகரிக்கும் போதும், மாநகராட்சி லாரிகள், மூன்றுசக்கர, இருசக்கர வாகனங்களில் சேகரித்த குப்பைகளை கொண்டு செல்லும் போதும் பெரும்பாலும் கையுறை மற்றும் முகக்கவசம் அணியாமல் பணியில் ஈடுபடுகின்றனர்.

கொரோனா தொற்று சமயத்தில் சுகாதாரமான இடங்களுக்கு சென்று வந்தால் கூட, சானிடைசர் கொண்டு கைகளை அவ்வப்போது சுத்தம் செய்து வருகிறோம். ஆனால், சுகாதார பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்வது வேதனை அளிக்கிறது.

’’தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்’’-சரத்குமார் வேண்டுகோள்

அவர்களுக்கு கையுறைகள் வழங்கப்படுகின்றதா அல்லது வழங்கப்படுகின்ற கையுறைகளை பயன்படுத்தாமல் உள்ளனரா என தெரியவில்லை. அவர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பை கருதி, மீண்டும் உபயோகிக்கக்கூடிய ரப்பர் கையுறைகள் வழங்கப்பட்டு, அவர்கள் அதை பயன்படுத்துவதையும், முகக்கவசங்கள் அவசியம் அணிவதையும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.