சென்னையிலுள்ள 1,516 நிவாரண முகாம்களில் 1,33,000 பேர் தங்கவைப்பு!

 

சென்னையிலுள்ள 1,516 நிவாரண முகாம்களில் 1,33,000 பேர் தங்கவைப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி அமைத்துள்ள ஆயிரத்து 516 நிவாரண முகாம்களில் சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட15 மண்டல பகுதிகளில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் என சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பர்மா காலணி, ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கக் கூடிய மக்கள் அனைவரும் வெள்ள நிவாரண முகாமுக்கு செல்ல மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2015 வெள்ள பாதிப்பின் போது அதிகப்படியான பாதிப்பை மேற்கண்ட இடங்கள் சந்தித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னையிலுள்ள 1,516 நிவாரண முகாம்களில் 1,33,000 பேர் தங்கவைப்பு!

இந்நிலையில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 516 நிவாரண முகாம்களில் சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் முகாம்களில் உள்ளனர்.