இலங்கை அரசை கண்டிக்காத அமைச்சர் ஜெய்சங்கருக்கு வன்னிஅரசு கண்டனம்

 

இலங்கை அரசை கண்டிக்காத அமைச்சர் ஜெய்சங்கருக்கு  வன்னிஅரசு  கண்டனம்

இலங்கையில் 1987ம் ஆண்டில் மாகாண கவுன்சில் முறை கொண்டு வரப்பட்டது. தற்சமயம் ஒன்பது மாகாண கவுன்சில் உள்ளன. இந்த மாகாண கவுன்சில் முறையினை ஒழித்துவிட வேண்டும் என இலங்கை அரசு கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின் போது விவாதிக்கப்பட்டது.

இலங்கை அரசை கண்டிக்காத அமைச்சர் ஜெய்சங்கருக்கு  வன்னிஅரசு  கண்டனம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்றுநாள் பயணமாக கடந்த ஐந்தாம் தேதி அன்று இலங்கை சென்றார். மூன்றாவது நாளான நேற்று ஜெய்சங்கரை, சம்பந்தன் தலைமையினால தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகள் சந்தித்தது. தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, மாகாண கவுன்சில் விவகாரம் பேசப்பட்டுள்ளது தெரிகிறது.

இலங்கை அரசை கண்டிக்காத அமைச்சர் ஜெய்சங்கருக்கு  வன்னிஅரசு  கண்டனம்

இலங்கை போன வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 13வது சட்டதிருத்தத்தை அமல்படுத்துவது, இலங்கையே முடிவு செய்யலாம் என்று சொல்லியிருப்பது இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானது. 20வது சட்டதிருத்தம் மூலம் 13வது சட்டதிருத்தத்தை அழிக்கும் சிங்களபேரினவாத அரசை கண்டிக்காமல், இனவாதத்துக்கு துணைபோவதா? என்று கண்டனம் தெரிவிக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்திதொடர்பாளர் வன்னி அரசு.

இலங்கை அரசை கண்டிக்காத அமைச்சர் ஜெய்சங்கருக்கு  வன்னிஅரசு  கண்டனம்

அவர் மேலும், 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி, அதிகாரப்பரவல் தொடர்பான 13வது சட்டதிருத்தத்தை சிங்கள அரசு அமல்படுத்தாமல் 20வது சட்டதிருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. இது தமிழினத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ள அவர்,

அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் இரு நாடுகளின் நலனுக்கானதே தவிர,தமிழர்களுக்கு எந்த நலனும் ஏற்படாது என்றும் தெரிவித்திருக்கிறார்.