ஈரோடு மாவட்டத்தில் பொது ஊரடங்கை மீறியதாக 130 வழக்குகள் பதிவு!

 

ஈரோடு மாவட்டத்தில் பொது ஊரடங்கை மீறியதாக 130 வழக்குகள் பதிவு!

ஈரோடு, ஆக.31 –
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்மாதம் வரக்கூடிய 5 ஞாயிற்று கிழமைகளிலும் எந்தவித தளர்வும் இன்றி பொது ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று 5- வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பொது ஊரடங்கை மீறியதாக 130 வழக்குகள் பதிவு!

இதையடுத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன முக்கியமான சாலைகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன எனினும் ஒரு சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித் திரிந்ததை இருந்ததை காணமுடிந்தது. பொது ஊரடங்கு மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். . இதைப்போன்று தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர். ஒரு சிலர் தடை உத்தரவை மீறி கடையை திறந்து வைத்தனர் நேற்று ஒருசிலர் தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தது காண முடிந்தது மேலும் தடை உத்தரவை மீறி பலர் மது விற்றதாக கைது செய்யப்பட்டனர்இவ்வாறாக நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு மீறியதாக 130 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர் மேலும் சில இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
-ரமேஷ்கந்தசாமி