130 ஆண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கியவனுக்கு 30 ஆண்டு சிறை!

 

130 ஆண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கியவனுக்கு 30 ஆண்டு சிறை!

இந்த பயங்கரம் நடந்தது இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில். இந்தோனேஷியாவில் இருந்து உயர் கல்விக்காக இங்கிலாந்து வந்தவன் ரெய்னார்டு சினாகா.இரண்டு பட்டப்படிப்புகள் முடித்த பின் லீட்ஸ் பல்கலையில் பி.ஹெச்டி ஆய்வு மாணவனாக இருக்கும் சினாகாவுக்கு வயது 36.

இந்த பயங்கரம் நடந்தது இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில். இந்தோனேஷியாவில் இருந்து உயர் கல்விக்காக இங்கிலாந்து வந்தவன் ரெய்னார்டு சினாகா.இரண்டு பட்டப்படிப்புகள் முடித்த பின் லீட்ஸ் பல்கலையில் பி.ஹெச்டி ஆய்வு மாணவனாக இருக்கும் சினாகாவுக்கு வயது 36.
அவரது ஆராய்ச்சியே மான்செஸ்டர் நகரில் வாழும் தெற்காசிய ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றியதுதான்.இவர்தான் 136 இளைஞர்களைப் பாலியல் வள்ளுறவுக்கு ஆளாக்கியதற்காக 30 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார். 

Reynhard-Sinaga

மான்செஸ்டர் சிட்டிசெண்டிரல் பகுதியில் இருக்கிறது சினாகாவின் அடுக்குமாடி குடியிருப்பு.அந்தப்பகுதியில் இருக்கும் பார்கள்,மால்களுக்கு தனியாக வரும் இளைஞர்களைத்தான் சினாகா குறிவைத்திருக்கிறார்.குறிப்பாக போதையில் இருப்பவர்கள்.அவர்களை அனுகி இன்னொரு ரவுண்டு சாப்பிடலாம் வா என்று அழைத்தோ,செல்ஃபோனுக்கு சார்ஜ் போட உதவுவதாகவோ,ஓவராகக் குடித்திருக்கிறாய் என் ஃபிளாடில் தூங்கிவிட்டு காலையில் போ என்றோ அவர்களை தன் வழிக்கு கொண்டுவந்து விடுவாராம்.

indonesia-man

அறைக்கு வந்ததும் மயக்கமருந்து கலந்த இன்னொரு டிரிங்க் கொடுத்து முற்றிலும் மயங்கியதும் அவருடன் வல்லுறவு கொண்டிருப்பதாக போலீசார் நிரூபித்து இருக்கிறார்கள் அதற்கு காரணமாக இருந்தது தன்னிடம் சிக்கியவர்களை சினாகா மொபைல் ஃபோனில் விதவிதமாக எடுத்து வைத்திருந்த வீடியோக்கள்தான்.2017-ல் சினாவிடம் சிக்கிக்கொண்ட ஒரு இளைஞன் போலீசை அழைத்த பிறகுதான் இப்படி ஒரு தொடர் பாலியல் வேட்டை நடந்ததை போலீஸ் அறிந்தது.

தன்க்கு இறையானவர்களின் ஐ.டி கார்டுகளை ஒரு ட்ராஃபி போல சேர்த்து வைத்திருந்ததாகச் சொல்கிறார் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி டிடெக்டிவ் ஜெத் அலி.சினாகாவின் வீடியோக்களில் இருந்து அவரிடம் சிக்கியவர்கள் மொத்தம் 195 பேர் என்று தெரியவந்துள்ளது, ஆனால் அதில் 65 பேரை அடையாளம் காணமுடியவில்லையாம்.இங்கிலாந்தின் குற்ற வர்லாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய தொடர் பாலியல் குற்ற வழக்கு என்று சொல்லப்படுகிறது.