13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை : மேலும் 2 பேர் கைது!

 

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை : மேலும் 2 பேர் கைது!

13 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் குரோம்பேட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற மனநல மருத்துவர் ராஜூ, கஸ்தூரி என்கின்ற அனிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஏற்கனவே 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை : மேலும் 2 பேர் கைது!

முன்னதாக சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது 13 வயது மகளை , தனது அக்கா மகளும் அவரது கணவரும் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறினார்.

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை : மேலும் 2 பேர் கைது!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், தந்தையை இழந்த 13 வயது சிறுமி சிக்னலில் பேனா, பென்சில் போன்ற பொருட்களை விற்று தனது தாயை காப்பாற்றி வந்துள்ளார். அப்போது சிறுமியின் பெரியம்மா மகள் ஷாகிதா பானு, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது தங்கையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தனது சித்தியின் அனுமதியுடன் சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இரண்டு மாதங்களாகியும் அந்த சிறுமியை வீட்டிற்கு கொண்டு வந்து விடாததால் சிறுமியின் தாய், ஷாகிதா பானுவிடம் சண்டை போட்டு சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமியின் செயல்களில் மாற்றங்கள் தெரிந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தியதில் அக்காவான ஷாகிதா பானுவும் அவர் கணவரான மதன்குமாரும் சேர்ந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளது தெரியவந்தது.

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை : மேலும் 2 பேர் கைது!

இந்த விவகாரத்தில் ஷாகிதா பானு, கணவர் மதன்குமார் ,சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா ,கார்த்தி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காசிமேடு பகுதியை சேர்ந்த பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.