ஓராண்டில் 13 தெலுங்கு தேசம் தொண்டர்கள் படுகொலை… 800 பேர் மீது தாக்குதல்! – சந்திரபாபு நாயுடு புகார்

 

ஓராண்டில் 13 தெலுங்கு தேசம் தொண்டர்கள் படுகொலை… 800 பேர் மீது தாக்குதல்! – சந்திரபாபு நாயுடு புகார்

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 13 தெலுங்கு தேசம் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 800க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு புகார் கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரனை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.

ஓராண்டில் 13 தெலுங்கு தேசம் தொண்டர்கள் படுகொலை… 800 பேர் மீது தாக்குதல்! – சந்திரபாபு நாயுடு புகார்ஜெகன் மோகன் தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறார். கடந்த ஓராண்டில் 350 தெலுங்கு தேசம் கட்சியினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 800க்கும் மேற்பட்டவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 51 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறுவதை நிறைவேற்ற ஆந்திர போலீசார் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பத்திரிகைகள், ஊடகங்கள் மீது நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநிலத்தின் அரசியலமைப்பை நிலைநிறுத்தும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. ஜெகன் மோகனின் இருண்ட கால ஆட்சியிலிருந்து மக்களைக் காப்பாற்ற, நம்பிக்கையை ஏற்படுத்த சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்” என்றார்.