கொரோனா வார்டில் தீ விபத்து- 13 நோயாளிகள் பலி!

 

கொரோனா வார்டில் தீ விபத்து- 13 நோயாளிகள் பலி!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு உயிர் சேதங்கள் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தை காட்டிலும் மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 60 ஆயிரம் என உச்சத்தை, தொட்டு வரும் நிலையில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையால் அம்மாநில அரசு தடுமாறி வருகிறது.

கொரோனா வார்டில் தீ விபத்து- 13 நோயாளிகள் பலி!

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் இறந்தவர்களின் சடலங்களை மீட்ட போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து செய்ததுடன் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நாசிக் நகரில் ஆக்சிஜன் கசிவு காரணமாக, 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.