சாலையில் வலம் வரும் வாகனங்களில் 57 சதவீதம் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடுதாம்… அதிர்ச்சி தகவல்

சாலையில் வலம் வரும் வாகனங்களில் 57 சதவீதம் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடுதாம்… அதிர்ச்சி தகவல்

3ம் நபர் காப்பீடு பாலிசி விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் நம் நாட்டில் பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் வாகன இன்சூரன்ஸை புதுப்பிப்பது இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இன்சூரன்ஸ் தகவல் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சாலைகளில் செல்லும் வாகனங்களில் காப்பீடு செய்யப்படாத வாகனங்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017-18ம் நிதியாண்டில் சாலையில் செல்லும் வாகனங்களில் காப்பீடு செய்யப்படாத வாகனங்கள் 54 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டில் 57 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சாலையில் வலம் வரும் வாகனங்களில் 57 சதவீதம் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடுதாம்… அதிர்ச்சி தகவல்
இன்சூரன்ஸ்

2019 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இந்திய சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 23 கோடிக்கும் அதிகமாக இருந்தது. இதில் 57 சதவீத வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் வலம் வந்துள்ளன. அதாவது 13.2 கோடி வாகனங்களின் உரிமையாளர்கள் வாகன இன்சூரன்ஸை புதுப்பிக்காமல் சாலையில் வலம் வந்தனர். 2017-18ம் நிதியாண்டில் 21.1 கோடி வாகனங்களில் 11.4 கோடி வாகனங்களின் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் இருந்தது.

சாலையில் வலம் வரும் வாகனங்களில் 57 சதவீதம் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடுதாம்… அதிர்ச்சி தகவல்
வாகனங்கள்

மாநிலங்களில் போக்குவரத்து போலீசார் பெரிய அளவில் வாகன இன்சூரன்ஸை செக் செய்வது கிடையாது, காப்பீட்டு நிறுவனங்கள் பின்தொடர்வதில் பற்றாக்குறை மற்றும் 3ம் நபர் காப்பீடு பாலிசி கட்டணம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பெரும்பாலான வாகன உரிமையாளாகள் வாகன இன்சூரன்ஸை புதுப்பிப்பது இல்லை. இன்சூரன்ஸ் செய்யப்படாத வாகனங்களில் 75 சதவீதம் இரு சக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.