13-05-2021 தினப்பலன் –

 

13-05-2021 தினப்பலன் –

பிலவ வருடம் I சித்திரை 30 I வியாழன்கிழமை I மே 13, 2021

13-05-2021 தினப்பலன் –

13-05-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்று உங்கள் பேச்சில் பதட்டமும் வேதனையும் பிரதிபலிக்கும். பணியில் மந்த நிலை காணப்படும். முறையான திட்டமிடல் இருந்தால் நீங்கள் சிறப்பாக செயலாற்ற முடியும். உங்கள் துணையுடனான உங்களின் அணுகுமுறையில் ஈகோ பிரச்சினை காணப்படும். நட்பான அணுகுமுறை மூலம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். தேவையில்லாத செலவுகளால் மனக் கவலைகள் ஏற்படும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவுகள் கூடுதலாக இருக்கும்

13-05-2021 தினப்பலன் –

ரிஷபம்

இன்றைய நாளில் மோசமான சூழ்நிலை காணப்படும். அவற்றை சமாளிப்பதற்கு போதுமான தைரியம் இழந்து காணப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். அதை மாற்றி நேர்மறையாக்குங்கள். இன்று வேலையில் மும்மரமாக இருப்பீர்கள். இணக்கமான அணுகுமுறை இருந்தால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து வெற்றி காண்பீர்கள். இன்று நிதிநிலைமை ஏமாற்றத்தை அளிக்கும். பதட்டமும் உணர்ச்சிவசப்படுதலும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

மிதுனம்

இன்று வளர்ச்சிக்கு சாதகமான நாளாக இருக்க வாய்ப்பில்லை. ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இன்று மனதை அமைதியாகவும் சமநிலையுடனும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். உங்கள் பணியில் முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள். இன்று உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணஇழப்பு காணப்படுகின்றது. உங்கள் அலட்சியமான போக்கினால் நீங்கள் பணம் இழக்க நேரலாம். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

13-05-2021 தினப்பலன் –

கடகம்

இன்றைய நாள் முடிவெடுப்பதற்கு சாதகமாக அமையும். உங்கள் திறமை காரணமாக உங்கள் இலட்சியத்தில் நீங்கள்வெற்றி காண்பீர்கள். இன்று குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பதில் தாமதம் இருக்கும். பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் தேவைகளுக்காக சிறு கடன்கள் வாங்குவீர்கள். உங்களின் மகிழ்ச்சியான மனநிலை உங்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.

13-05-2021 தினப்பலன் –

சிம்மம்

இன்று அழுத்தமான சூழ்நிலைகளும் வெற்றிக்கு குறைந்த வாய்ப்புகளும் காணப்படுகின்றன. தினசரி அலுவல்களை எச்சரிக்கையான அணுகுமுறையுடன் கையாளவும். உங்களிடம் காணப்படும் குறைந்த தன்னம்பிக்கை காரணமாக திறமையாக பணிகளை ஆற்றுவது கடினம். இதனால் பணிகளில் தொய்வு காணப்படும். இன்று வீணான செலவுகள் செய்வதற்கான சாத்தியம் உள்ளது. குடும்பத்திற்காக கூடுதல் செலவினங்களை செய்வீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

கன்னி

இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். தினசரி செயல்களை மேற்கொள்வதும் கூட இன்று கடினமாக இருக்கும். களிப்பான அணுகுமுறையை பராமரிப்பதன் மூலம் இன்று நற்பலன்களைக் காணலாம். பணிகளில் தவறுகள் நேரலாம். பணிகளில் தவறுகள் நேராமல் தடுக்க உங்கள் நிலைமையை உத்தேசித்து உங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். செலவுகள் பெருகி காணப்படும்.உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு நீங்கள் கடன் வாங்குவீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

துலாம்

இன்று யதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்கள் செயல்களில் உணர்ச்சிவசப்படக் கூடாது. அமைதியாக இருந்தால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். வெளியிடங்களுக்குச் செல்வது ஆறுதலை அளிக்கும். குறித்த நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். உங்களின் சிறப்பான செயல்திற்ன மூலம் உங்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். தேவையில்லாத செலவினங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உங்கள் செலவு செய்யும் பழக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.

13-05-2021 தினப்பலன் –

விருச்சிகம்

உறுதியுடனும் தைரியத்துடனும் செயல்பட்டு இன்று செயல்களில் வெற்றி கண்டு மகிழ்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் பணியாற்றும் முறையில் உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் செய்த பணிக்காக நற்பெயர் பெறுவீர்கள். இன்று பணம் அதிக அளவில் காணப்படும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ஆழ்ந்த திருப்தி உண்டாகும். இன்று ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளுமின்றி முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

13-05-2021 தினப்பலன் –

தனுசு

முக்கியமான விஷயங்களை நிறைவேற்றுவதற்கு உகந்த நாள். ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும். உங்கள் பணிவளர்ச்சியில் தடைகள் காணப்படும். முறையான திட்டமிடல் மூலம் பணிகளைக் கையாண்டால் பணிச்சுமைகளை கையாளலாம். பணம் அதிகம் பெறுவதற்கான அதிர்ஷ்டம் உள்ளது. கணிசமான தொகையை சேர்ப்பீர்கள். பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

மகரம்

இன்று அறிவுப்பூர்வமான அணுகுமுறையுடன் விஷயங்களை கையாள வேண்டும். வெற்றி அடைவதற்கு நீங்கள் கடினமான முயற்சியுடன் போராட வேண்டும். உங்கள் செயல்திறன் மூலம் பணியில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெறுவீர்கள். பிறரிடம் பேசும் போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பேச வேண்டும். எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளப் பழகுங்கள். இன்று முக்கியமான நிதி முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற நாள் அல்ல.

13-05-2021 தினப்பலன் –

கும்பம்

உங்கள் நலன்களை ஊக்குவிக்கும் விஷயங்களில் முடிவெடுப்பதற்கு இன்று உகந்த நாள். இன்று நீங்கள் நிறைவான திருப்தியுடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்திறன் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். பணியில் உங்கள் திறமைகளை காண்பிப்பீர்கள். நிதி நிலைமை மிகவும் திருப்திகரமாக காணப்படும்.உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும். உங்களின் சிறந்த மனநிலை காரணமாக சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

மீனம்

இன்று முன்னேற்றமான பலன்கள் காணப்படும். உங்களுடைய உறுதியான முயற்சியினால் நீங்கள் மேற்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனஆற்றலும் நேர்மறையான எண்ணங்களும் இருந்தால் வெற்றி கிடைக்கும். பணியில் தவறுகளைக் குறைக்கும் வண்ணம் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கவனச் சிதறல்கள் ஏற்படாவண்ணம் கவனித்துக் கொள்ளுங்கள். கையில் உபரி பணம் காணப்படும். அதை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்துவீர்கள்..