13 வருடங்கள் கழித்து மீண்டும் திரைக்கு வரும் தனுஷின் புதுப்பேட்டை! 

 

13 வருடங்கள் கழித்து மீண்டும் திரைக்கு வரும் தனுஷின் புதுப்பேட்டை! 

நடிகர் தனுஷ் நடித்துள்ள புதுப்பேட்டை படம் மீண்டும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.

சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள புதுப்பேட்டை படம் மீண்டும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அசுரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இயக்குநர் செல்வராகவன் இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. கேங்ஸ்டர்ஸ் படம் என்றால் அடுத்த நொடி நினைவுக்கு வருவது புதுப்பேட்டை தான். கொக்கி குமார் எனும் ரௌடியின் ஆரம்ப காலம் துவங்கி இறுதி கட்டம் வரை ஒவ்வொரு காட்சியையும் கச்சிதமாகச் செதுக்கியிருப்பார் செல்வராகவன்.

pudupettai

இந்நிலையில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகி 13 ஆண்டு கடந்துள்ள நிலையில், இப்படத்தின்  இரண்டாம் பாகம் வெளிவராதா என்ற ஏக்கத்தில் இன்றும் ரசிகர்கள் உள்ளனர். அதைப்போக்கும் விதமாக மீண்டும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல வெற்றி திரையரங்கத்தில் நாளை புதுப்பேட்டை திரையிடப்பட உள்ளதாக, அந்நிறுவனத்தின் நிறுவனர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதில் விஜய்சேதுபதி,ஆடுகளம் முருகதாஸ் என்று இன்னும் ஏராளமானோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.