13 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷுடன் ஜோடி சேர்ந்த சினேகா

 

13 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷுடன் ஜோடி சேர்ந்த சினேகா

நடிகை சினேகா 13 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகர் தனுஷுடன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சென்னை: நடிகை சினேகா 13 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகர் தனுஷுடன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாரி 2 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதேபோல் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்து வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார். இதில் தனுஷூக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். 

dhanush and sneha

இதனைத் தொடர்ந்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘கொடி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் தனுஷ் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடையாத இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தமாதம் துவங்க உள்ள நிலையில், மகன், தந்தை என்ற இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடிக்கிறார். அதில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார்.

pudupettai

மேலும் ஏற்கனவே இவர்கள் இருவரும் 13 வருடம் முன்பு இணைந்து புதுப்பேட்டை திரைப்படம்  நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.