13 வயது சிறுமிக்கு பள்ளி ஆசிரியர் கொடுத்த நூதன தண்டனை… விரல்களை இழக்கும் அபாயத்தில் மாணவி !

13 வயது சிறுமிக்கு பள்ளி ஆசிரியர் கொடுத்த நூதன தண்டனை… விரல்களை இழக்கும் அபாயத்தில் மாணவி !

பொதுவாக பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும் ,ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்து அவர்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வழி காட்டுவார்கள் என்று நம்பித்தான் எல்லா பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.நல் வழிப்படுத்துகிறோம் என்ற பேரில் சில ஆசிரியர்கள் அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குவதும் உண்டு.அப்படியொரு சம்பவம் வளர்ந்த நாடான சீனாவில் நடந்து பலரையும் அதிர வைத்திருக்கிறது.

girl

லு யான்யான் என்ற 13 வயது சிறுமி சீனாவில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார், அவரை ஆசிரியர் வெளியில் படந்திருக்கும் பனியை வெறும் கைகளால் அள்ள சொல்லியிருக்கிறார்.ஆசிரியரின் வார்த்தைக்கு மறுப்பேதும் சொல்லாத  அந்த மாணவி பல மணி நேரம் வெறும்  கையாலேயே பனியை எடுத்து அப்புறப்படுத்தியிருக்கிறார்.தொடர்ந்து சில மணி நேரங்கள் பனியை கையில் வைத்திருந்ததால்  மாணவியின் கை  விரல்களில் பிரோஸ்ட் பைட் (Frostbite) ஏற்பட்டுள்ளது. 

இந்த தகவல் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்ட  பிறகே பெற்றோருக்குத் தெரிய வந்திருக்கிறது..அதன் பிறகு டாக்டரைச் சந்தித்த போதுதான் இந்த நோயின் தீவிரம் அவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது

girl finger

.இது விரல்களின் தசைகளில் காயத்தை ஏற்படுத்தியும் வீக்கத்தை உருவாக்கி, சிவப்பிலிருந்து கருப்பாக்கி உணர்ச்சியற்றதாக்கி விடும்,இப்படி பட்ட அறிகுறிகள் கை கால் விரல்கள்,மூக்கு,காது,கன்னம் போன்றவற்றில் ஏற்படும் மேலும் இது கை,கால் செயலிழப்பு போன்றவற்றில் முடிவடையும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இப்படியிருக்க, சிறுமி இது குறித்து பள்ளிக்கூடத்தில் இருந்த போதே ஆசிரியரிடம் தனது விரல்கள் உணர்ச்சி இழந்ததை தெரிவித்தும் ஆசிரியர் மருத்துவமைக்கு அழைத்து செல்லவில்லை என அவர் தெரிவித்தார்.