13 வயதிலேயே மகாராணி… ஜெயலலிதா ஃபிளாஷ் பேக்…

 

13 வயதிலேயே மகாராணி… ஜெயலலிதா ஃபிளாஷ் பேக்…

ஜெயலலிதாவின் திரைப்பயணம்  மிக இளம் வய்திலேயே,அவர் அறியாமலே துவங்கிவிட்டது.1948-ல் பிறந்த ஜெயலலிதா 1958-ல் வெளிவந்த மாயா பஜாரிலேயே தலைகாட்டி விட்டார்.சிறுவயது வத்சலாவின் ( சச்சு) தோழியாக நின்று கொண்டு இருப்பா

ஜெயலலிதாவின் திரைப்பயணம்  மிக இளம் வய்திலேயே,அவர் அறியாமலே துவங்கிவிட்டது.1948-ல் பிறந்த ஜெயலலிதா 1958-ல் வெளிவந்த மாயா பஜாரிலேயே தலைகாட்டி விட்டார்.சிறுவயது வத்சலாவின் ( சச்சு) தோழியாக நின்று கொண்டு இருப்பார்.

jaya

அடுத்த மூன்றே வருடத்தில் அதாவது 1961-ல் தனது 13 வயதில் கதாநாயகி ஆகிவிட்டார். அன்றைய ஜனாதிபதி வி.வி கிரியின் மகன சங்கர் கிரி தயாரித்த அந்தப் படத்தின் பெயர் The Epistle ! அது ஒரு ஆங்கிலப் படம்.ரமணா ரெட்டி என்பவரும் ஜெயலலிதாவும் நடித்த அந்தப் படம் மிகத்தாமதமாக வந்து மிக மோசமாக ஊற்றிக்கொண்டது.

அடுத்து 1964-ல் ,வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இயக்கிய பி.ஆர் பந்துலுவின் சின்னடா கொம்பே என்கிற கன்னடப் படத்தில் நடித்தார்.அது அவரை நட்சத்திரமாக்கிவிட்டது.ஆனால்,அந்தப் படம் வயது வந்தோருக்கான ஏ சர்டிஃபிக்கேட்டுடன் வெளிவந்ததால் அந்தப்படத்தை தன்னால் அப்போது பார்க்க முடியவில்லை என்று ஜெயலலிதா ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

jaya

இதைத் தொடர்ந்துதான் தமிழில் ஸ்ரீதர் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த வெண்ணிற ஆடை ( 1965 ) வெளிவந்து வெற்றிபெற்றது.அதோடு அவரது குழந்தைப் பருவம் முடிந்து விட்டது.1948 ஃபிப்ரவரியில பிறந்த ஜெயலலிதாவுக்கு  ஆயிரத்தில் ஒருவன் ரிலீசாகும்போது 16 வயது.தன்னை விட மூன்று மடங்கு வயதுல்ல ஹீரோவான எம்ஜிஆரின் ஹீரோயின் ஆன ஜெயலலிதாவுக்கு தோழியாக நடித்தவர் சச்சு.

mgr

ஏழு வருடம் முன்பு மாயா பஜாரில் குட்டி வத்சலாவாக வந்த சச்சுவுக்கு ஜெயலலிதா தோழி,இப்போது ஜெயலலிதாவின் ஜோடியாக சச்சு.அப்போதே வாழ்க்கை ஒரு வட்டம் என்று அவருக்குப் புரிந்திருக்கும்.அதே 1965-ல் அவர் நடித்த ‘மனுஷலு மா மாட்டலு’ என்கிற நாகேஸ்வர ராவுடன் நடித்த தெலுங்குப் படமும் ஹிட் அடிக்க அந்த பதினாறு வயது சிறுமி,வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஒரு மகாரானிய்யாக ஆக்கப்பட்டு விட்டார்.அரை நூற்றாண்டு காலம் அதிலிருந்து இறங்காமலே போய்விட்டார்.