13-வது ஐபிஎல் தொடர்: மும்பையில் இறுதிப்போட்டி, இரண்டு விதமான டைமிங் – பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு

 

13-வது ஐபிஎல் தொடர்: மும்பையில் இறுதிப்போட்டி, இரண்டு விதமான டைமிங் – பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு

13-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் வருகிற மே 24-ஆம் தேதி நடைபெற உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.

டெல்லி: 13-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் வருகிற மே 24-ஆம் தேதி நடைபெற உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.

ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதன் முடிவில் 13-வது ஐபிஎல் போட்டிகளின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 29-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் வருகிற மே 24-ஆம் தேதி நடைபெற உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.

ipl 2020

மேலும் ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை இரவு ஆட்டம் வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கும். அதை 30 நிமிடம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்தார். ஆனால் தற்போது இரண்டு விதமான டைமிங் மட்டுமே எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் என்று அவர் கூறினார். அதாவது மாலை 4 மணிக்கு ஒரு போட்டியும், இரவு 8 மணிக்கு மற்றொரு போட்டியும் நடக்கும் என்று கங்குலி தெரிவித்தார்.

இதுதவிர இரண்டு புதிய விதிமுறைகள் இம்முறை ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது போட்டியின்போது பந்துவீச்சாளர்கள் வீசும் பந்து பேட்ஸ்மேன் ஹெல்மெட்டில் தாக்கி தலையில் அதிர்வு ஏற்பட்டு அவரால் விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கும் முறை மற்றும் நோ-பாலை ஆடுகள நடுவருக்கு பதிலாக 3-வது நடுவர் முடிவு செய்யும் விதிமுறை ஆகியவை ஆகும்.