13 ஆயிரம் பேரை விமானத்தில் ஏற்ற மறுத்த விமானங்கள சேவை நிறுவனங்கள்! ரூ.5 கோடிக்கும் மேல் திரும்ப பெற்ற பயணிகள்…

 

13 ஆயிரம் பேரை விமானத்தில் ஏற்ற மறுத்த விமானங்கள சேவை நிறுவனங்கள்! ரூ.5 கோடிக்கும் மேல் திரும்ப பெற்ற பயணிகள்…

கடந்த மே முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் மோசமான வானிலை உள்பட பல்வேறு காரணங்களால் 13 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளை விமான சேவை நிறுவனங்கள் விமானத்தில் அழைத்து செல்லவில்லை.அதனால் அந்நிறுவனங்கள் பயணிகளுக்கு ரீபண்டாக ரூ.5 கோடிக்கு மேல் கொடுத்துள்ளனர் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி,  விமான பயணம் தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதில் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மே முதல் அக்டோபர் வரையிலான 6 மாத காலத்தில், தொழில்நுட்ப கோளாறு, செயல்பாடு மற்றும் மோசமான வானிலை நிலவரம் போன்ற காரணங்களால் நம் நாட்டின் டாப் 5 விமான சேவை நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர்ஆசியா மற்றும் விஸ்தாரா ஆகியவை 13 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளை விமானத்தில் அழைத்து செல்ல மறுத்துள்ளன.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

இதனால் அந்நிறுவனங்கள் விமான பயணிகளுக்கு மொத்தம் ரூ.5.63 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு திரும்ப வழங்கியுள்ளன. இதில் ஏர் இந்தியா நிறுவனம்தான் அதிகபட்சமாக ரீபண்ட் வழங்கியுள்ளது. குறிப்பிட்ட 6 மாத காலத்தில் 9,978 பயணிகளுக்கு சேவை வழங்க முடியாததால் ஏர் இந்தியா நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4.34 கோடியை திரும்ப வழங்கியது.

இண்டிகோ

அடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ.86 லட்சம் (2,624 பயணிகள்) திரும்ப  வழங்கியுள்ளது. இண்டிகோ நிறுவனம் 325 பயணிகளுக்கு ரீபண்டாக ரூ.34.2 லட்சம் வழங்கியுள்ளது. விஸ்தாரா ரூ.8 லட்சமும் (103 பயணிகள்), ஏர் ஆசியா ரூ.1.5 லட்சமும் (41 பயணிகள்) வழங்கியுள்ளன. ஓராண்டில் நம் நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான பயணிகள் விமானத்தில் பறக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.