13 ஆண்டுகள் பொய்யைத்தான் சொன்னேன்… மன்னிப்புக்கேட்டு ராஜினாமா செய்த பெண் ஊடகவியலாளர்!

 

13 ஆண்டுகள் பொய்யைத்தான் சொன்னேன்… மன்னிப்புக்கேட்டு ராஜினாமா செய்த பெண் ஊடகவியலாளர்!

ஈரான் அரசு தொலைக்காட்சியில் 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் இத்தனை ஆண்டுகளாக நான் பொய்யான தகவலை சொல்லியதற்காக மன்னிப்புக் கேட்டு பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் அரசு தொலைக்காட்சியில் 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் இத்தனை ஆண்டுகளாக நான் பொய்யான தகவலை சொல்லியதற்காக மன்னிப்புக் கேட்டு பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

iran

ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் க்ளாரே ஜப்பாரி. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அரசு சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக பொய்யான தகவலைப் பரப்பிவந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ஒரு சில நிமிடங்களில் அந்த பதிவை அவர் அகற்றினார். இருப்பினும், மனசாட்சி இன்றி தொடர்ந்து ஈரான் தொலைக்காட்சியில் பணியாற்ற விருப்பமில்லை என்று கூறி தனது வேலையை அவர் ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

palne

கடந்த வாரம் உக்ரைன் விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானம் இயந்திர செயல்திறன் குறைவு பாதிப்பு காரணமாக விபத்துக்குள்ளானது என்று ஜப்பாரிதான் செய்தி வெளியிட்டாராம். உலக நாடுகள் எல்லாம் இது ஏவுகணை தாக்குதல் என்று குற்றம்சாட்டி வந்த நேரத்தில், திரும்பத் திரும்ப இது விபத்து என்று இவர் கூறிவந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடைசியில் ஈரான் அரசு இது எதிர்பாராத மனித தவறால் நிகழ்ந்துவிட்டது என்று உண்மையை ஒப்புக்கொண்டது. 

journalist

இதனால் பொய்யான தகவலை சொல்லிவந்தோமே என்ற குற்ற உணர்வு இவருக்கு இருந்ததாகவும் அதனால் ராஜினாமா செய்துவிட்டதாகவும் ஈரானிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ஜப்பாரி மட்டுமல்ல, ஈரான் அரசு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த சபா ராட், சஹ்ரா கட்டாமி உள்பட மேலும் சிலர் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். 
விமானம் இயந்திரக் கோளாற்றால் விபத்துக்குள்ளானது என்று தவறான செய்தியை வெளியிட்டதற்காக ஈரானின் பல ஊடகவியலாளர்கள் மன்னிப்புக் கேட்டுள்ளது பரபரப்பையும் ஈரான் அரசுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.