12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

 

12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் 10ஆம் வகுப்பு தேர்வு, 11ஆம் வகுப்பு தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு செயல்முறை தேர்வு ஆகியவை சேர்த்து மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன் படி, கடந்த 19 ஆம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியானது. மாணவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

அரசு அளித்துள்ள மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அதற்கான தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.