12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 19ம் தேதி வெளியாகிறதா?

 

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 19ம் தேதி வெளியாகிறதா?

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு என எந்தத் தேர்வும் நடத்தப்படாததால் மதிப்பெண்கள் வழங்குவதில் குழப்பம் நீடித்தது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 19ம் தேதி வெளியாகிறதா?

இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி கடந்த 16ஆம் தேதி அதன் விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் 50%, 11ம் வகுப்பு மதிப்பெண் 20%, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் 30% சேர்த்து மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதன் படி, 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கீடு பணி செய்யும் பணி தொடங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி இந்த மாதத்திற்குள் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும். முதல்வர் சொன்னவுடன் முடிவுகள் வெளியாகும். முடிவுகள் தயாராக உள்ளது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வரும் 19ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.